mardi 9 février 2016

ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இலங்கை முன்னேற்றம் இந்த ஆண்டின் பட்டியலில்

ஊழல் தடுப்பு நடவடிக்கையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கிப்பட்டுள்ளது.வருடாந்தம் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகின்ற 'ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல்' எனப்படும் சர்வதேச அமைப்பின் படி, பூச்சியம் புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழலற்ற நாடுகளாகவும், 100 புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஊழல் தலைவிரித்தாடும் நாடுகளாகவும் பட்டியலிடப்படுகின்றன.இந்த ஆண்டின் பட்டியலில் 'இலங்கை 37 புள்ளிகளைப் பெற்று 83 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 85 ஆ ம் இடத்தில் இருந்த இலங்கை ஊழல் தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் கண்டுள்ளமை இந்த ஆண்டின் பட்டியல் மூலம் தெளிவாகியுள்ளது.பெனின் இராச்சியம், சீனா, லைபீரியா, கொலம்பியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டின் அட்டவணையில் இலங்கையுடன் சம நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire