mardi 9 février 2016

கைது ஆணை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி கைது

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதி  கைதுமாலத்தீவு அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் பதவி வகித்து வருகிறார். இவர் அரசு பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்த வழக்கு மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை நீதிபதி அகமது நிகான் விசாரித்தார். பின்னர் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தார்.
அதை தொடர்ந்து நீதிபதி அகமது நிகானை மாலத்தீவு போலீசார் கைது செய்தனர். மேலும் முன்னாள் அரசு வக்கீல் முக்தாஸ் முஷினும் கைதானார்.
அதிபர் மீது தொடரப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு தொடர்ந்து அதற்காக கைது வாரண்ட் பிறப்பித்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட முன்னாள் அரசு வக்கீல் முக்தாஸ் முஷின் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் நீதிபதி அகமது நிகான் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு முன்பு கடந்த 2012–ம் ஆண்டு முதன் முறையாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முகமது நஷீத் ஆட்சியில் கைது செய்யப்பட்டார். அவருக்கு தற்போது கைது செய்யப்பட்டு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 2–வது நீதிபதி நிகான் கைது செய்யப்பட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire