mardi 16 février 2016

புனிதர்கள் என்பவர்களே,,,,திருமணமான பெண் ஒருவருடன் 30 ஆண்டுக்காலம் போப்.


திருமணமான பெண்ணுடன் போப் ஜான் பால் நெருக்கம்: பிபிசி ஆவணப் படத்தில் தகவல்கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான மறைந்த போப் இரண்டாம் ஜான் பால், அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவ ஆர்வலரான திருமணமான பெண் ஒருவருடன் 30 ஆண்டுக்காலம் நெருக்கமான நட்புறவு வைத்திருந்தார் என்று பிரபல பிபிசி தொலைக்காட்சி நிறுவனம், திங்கள்கிழமை பரபரப்பு ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது.
    போலந்து நாட்டைச் சேர்ந்த இரண்டாம் ஜான் பால், கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் அவர் மறைந்த     2005-ஆம் ஆண்டு வரை கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் தலைவரான போப் ஆண்டவராகப் பதவி வகித்தார். மறைவுக்குப் பின்னர் புனிதர் ஆகவும் அறிவிக்கப்பட்டார். பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப் படத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
  போப் ஆக உயர்வதற்கு முன்பு, கரோல் வோஜ்டைலா என்ற இயற்பெயர் கொண்ட ஜான் பால், போலந்து கத்தோலிக்க திருச்சபையில் கர்தினால் ஆகவும், ஆர்ச் பிஷப் ஆகவும் பொறுப்பு வகித்தார். அவர் கர்தினாலாக இருந்தபோது தத்துவம் குறித்து எழுதிய புத்தகத்தால் ஈர்க்கப்பட்ட அன்னா தெரசா டைமீனீக்கா என்ற திருமணமான அமெரிக்கப் பெண்மணி, கடந்த 1973-ஆம் ஆண்டு போலந்து வந்து கரோல் வோஜ்டைலாவைச் சந்தித்தார். இந்தப் பெண்மணி, போலந்தைப் பூர்விகமாகக் கொண்டவர். அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இருவரிடமும் நட்பு மலர்ந்து, கடிதத் தொடர்பு ஏற்பட்டது. தொடக்கத்தில் சாதாரணமாக இருந்த கடித வாசகங்கள், நாட்கள் செல்லச் செல்ல மிகவும் நெருக்கமானதாகவும் உணர்சிகரமானதாகவும் ஆகின. இந்தக் கடிதங்களைக் கொண்டு, ஜான் பால் எல்லை மீறினார் என்று கூற இயலாது என்ற போதிலும், இருவருக்கும் இடையே சிக்கலான, உணர்ச்சிகரமான நட்பு இருந்ததை போப் ஜான் பாலின் கடித வாசகங்கள் தெரிவிக்கின்றன.
   
1976-ல் கார்டினலாக இருந்தபோது கத்தோலிக்க மாநாட்டுக்காக அமெரிக்கா வந்த ஜான் பால் (கரோல் வோஜ்டைலா) டைமீனீக்காவின் வீட்டில் தங்கினார். ஒரு கடிதத்தில் "தெரசா,உனது 3 கடிதங்களும் கிடைத்தன. அதில் இதயம் நொறுங்கியதுபோல் உணர்வதாகக் கூறுகிறாய். இந்த வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை' என்று ஜான் பால் எழுதியுள்ளார்.
   டைமீனீக்காவை கடவுள் தனக்குக் கொடுத்த பரிசு என்று அவர் வர்ணித்துள்ளார். ஒரு முறை டைமீனிக்காவுக்கு, கழுத்தில் அணியும் நெக்லஸ் போன்ற மதச் சின்னத்தையும் பரிசாக அனுப்பியுள்ளார். இருவரும் சில சமயங்களில் ஒன்றாக விடுமுறைகளையும் கழித்துள்ளனர் என்று பிபிசி ஆவணப் படம் தெரிவிக்கிறது. டைமீனீக்காவுக்கு போப் இரண்டாம் ஜான் பால் எழுதிய கடிதங்களை வைத்து மட்டுமே இந்த ஆவணப் படத்தை பிபிசி தயாரித்துள்ளது.
   இந்தக் கடிதங்களின் பிரதிகளை, 2008-ஆம் ஆண்டில் டைமீனிக்கா ஏலத்தில் விட்டபோது அவற்றை போலந்து தேசிய நூலகம் வாங்கி, ஆவணக் காப்பகத்தில் வைத்துள்ளது. ஜான் பாலுக்கு டைமீனிக்கா எழுதிய கடிதங்கள் குறித்து பிபிசி எதுவும் தெரிவிக்கவில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire