lundi 4 août 2014

ஆச்சரியமூட்டும் இலங்கையர்.உணவின்றி 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும்

உணவுகள் எதனையும் உட்கொள்ளாமல் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என இலங்கையர் ஒருவர் கூறியுள்ளார்.
மனிதர்கள் உணவின்றி இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
எனினும் கிர்பி டி லேனர்ரோல் (Kirby de Lanerolle) என்ற இந்த இலங்கையர் சுத்தமான காற்றும் ஊட்டமும் மட்டுமே மனிதர்கள் உயிர்வாழ தேவை என குறிப்பிட்டுள்ளார்.
சுவாசிப்பது தனது வாழ்க்கை முறை எனவும் ஒளி, காற்று மற்றும் அதிர்வுகள் மூலம் நீண்டகாலம் உயிர் வாழ முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உண்ணும் உணவுகளை விட சிறந்த கலோரி சத்துக்கள் வெளியில் உள்ளன. அதிர்வுகள், ஒளியணுக்கள் மற்றும் ஒளி மூலம் கலோரிகள் உடலுக்குள் வருகின்றன.
மனிதர்களின் சக்தி மையங்கள் திறந்திருக்குமாயின் எதனையும் உணவாக அளிக்க முடியும்.
கடந்த 10 மாதங்களில் 500 கலோரி உணவுகளை உண்டதாக ஒப்பு கொள்ளும் அவர், அது உடலுக்கு மோசமானதாக இருந்தததை உணர்ந்ததாக கூறியுள்ளார்.
சாப்பிடும் போது சோர்வான உணர்வை ஏற்படுத்தும். சாப்பிடும் போது உடலின் உஷார் நிலை உடலை விட்டு சென்று விடுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டி லேனர்ரோல் அவரது 16 வயதில் போதைக்கு அடிமையாகி இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் 1995 ஆம் ஆண்டு தேசிய அளவிலான கனிஷ்ட துப்பாக்கிச் சூடும் போட்டியில் அவர் வாகையர் பட்டத்தை வென்றுள்ளதுடன் குத்துச் சண்டை போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.
இலங்கை சமூக சேவைகள் அமைச்சின் ஆலோசகராக இருந்துள்ள அவர், வெற்றிகரமான தொழிலதிபருமாவார். மூன்று மாதங்கள் தண்ணீர் மாத்திரம் அருந்தி மரதன் ஓட்டப் போட்டியை நிறைவு செய்த ஓரே நபர் இவர் என நம்பப்படுகிறது.
6 ஆண்டுகளுக்கு முன்னர், 6 வருடங்களுக்கு மேல் சாப்பிடாதவர்கள் மற்றும் 40 பகல் 40 இரவுகள் தண்ணீர் அருந்தாது இருந்தவர்கள் பற்றி கற்றறிந்துள்ளார்.
புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உணவு மூலமே ஏற்படுகிறது என்பதை அவரது குருவின் எழுத்தில் கூறப்பட்டுள்ள அவர் நம்பியுள்ளார்.

சுவாச வாழ்க்கை முறையை ஏனையவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது தனது விருப்பம் எனவும் இந்த வாழ்க்கை முறையை முயற்சித்த சிலர் இறந்து விட்டனர் எனவும் கிர்பி டி லேனர்ரோல் தெரிவித்துள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire