samedi 9 août 2014

கூத்தாடிகள் பச்சையான சந்தர்ப்பவாதிகள்.

கூத்தாடிகள்' என்பது மண்ணின் கலைஞர்களை குறிக்கும் சொல். அந்த சொல் கொண்டு இவர்களை 'கெளரவ'ப்படுத்த வேண்டாம்!... இவர்கள் பச்சையான சந்தர்ப்பவாதிகள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமான படுத்திய இலங்கை கண்டனத்திற்குறியது தான், அதனால் தங்களளின் ஒருநாள் கால்சீட்டை ஒதுக்கி வைத்து, போரடிய திடீர் போராளிகளான இந்த கூத்தாடிகளை பார்த்து கேட்கிறேன், என்றைக்காவது உங்களை புகழின் உச்சுக்கு ஏற்றிய இந்த சாமனிய மக்களுக்காக உங்கள் கால்சீட்டை ஒதுக்கி வைத்து போராடியதுண்டா ? இந்தியாவில் நடக்கும் சாதிக் கொடுமைகளை எதிர்த்து போராடி இருக்கிறீர்கள் ? உலகமுழுவதும் நடக்கும் ஒடுக்குமுறையை எதிர்த்து கேள்விக்கேட்டு இருக்கிறீர்களா ? கலைஞர் ஆட்சியில் அவரை கொண்டாடினீர்கள், இப்போ அம்மையாரை கொண்டாடுகிறீ்கள். ஆட்சி மாறும் போதெல்லலாம் உங்கள் மனமும் மாறுகிறது.கூத்தாடி விஜய்  உணர்ச்சியைக் கொட்டி பேசியிருக்கிறார். ஆனால் ஜெயா அம்மையாரும் ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் என்பதையும் அவர் இதுபோல் பல நடிப்புகளை பார்த்தவர் என்பதையும் நடிகர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும. தமிழக அரசியலில் ஏற்கனவே பல தடவை ஜெயா அம்மையார் இழிவு படுத்தப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் வராத உணர்வு இப்போதுமட்டும் ன்வந்திருக்கிறது ந்த கூத்தாடிகள் அப்போதெல்லாம் அது தன் தாயை இழிவு படுத்தியதாக அவர் கருதவில்லையா ...."ஆடை முழுவதும் நனைய நனைய மழையடிக்குதடி.." என்று அந்த காலத்திலே ஜெயலலிதாவை ஆடவிட்ட இந்த சினிமாக்காரர்கள் இன்று அம்மாவை ஆபாசமாக சித்தரிப்பதா என்று போராட்டம் நடத்துகிறார்களே...
இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? 

Aucun commentaire:

Enregistrer un commentaire