mercredi 13 août 2014

சிறிலங்கா இந்த ஆண்டிலேயே திடீர் அதிபர் தேர்தல்?

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசரின் சிறிலங்கா பயணத்துக்கு முன்பாக, அதிபர் தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

அதற்கு சட்டத்தில் இடமுள்ளதா என்று அறிந்து கொள்ள உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டு நொவம்பர் 19ம் நாளுக்கு முன்னதாக, அதிபர் தேர்தலை நடத்த முடியுமா என்று உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிய, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார். 

அதிபர் சட்டத்தின்படி, தேர்தலுக்கு 35 தொடக்கம் 65 நாட்களுக்குள், அழைப்பு விட வேண்டும். 

முன்னதாக, அடுத்த ஆண்டு துவக்கத்தில் அதிபர் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது, அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் நாள் பாப்பரசர் சிறிலங்கா வருவதற்கு முன்னதாக அதிபர் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. 

இதனால், சிறிலங்கா அதிபர் பதவியேற்று நான்கு ஆண்டுகள் முடிவடைவதற்கு முன்னதாகவே, அதிபர் தேர்தலை நடத்தலாமா என்று உயர்நீதிமன்றத்தில் கருத்தை அறிய சிறிலங்கா அதிபர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire