vendredi 1 août 2014

இலங்கையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தென்பகுதிக்கு நல்லெண்ண சுற்றுலா!

புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அண்மையில் தென்பகுதிக்கான நல்லெண்ண சுற்றுலாவொன்றை மேற்கொண்டிருந்தனர். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சுற்றுலாவின் போது, பாராளுமன்றம், விகாரமாகாதேவி பூங்கா, ‘அபே கம’ எனப்படும் கலாச்சார கிராமம் ஆகியவற்றுக்கு சென்றனர்.மேலும் காலித்துறைமுகம், மற்றும் வெலிகமவில் உள்ள விளையாட்டு மைதானங்களையும் பார்வையிட்டுள்ளனர். அம்பாந்தோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இக்குழுவினர் டிவிநுவர கோவில்,அம்பாந்தோட்டை பொட்டானிக்கல் தோட்டம், புதிதாக அமைக்கப்பட்ட துறைமுகம், சர்வதேச மாநாட்டு மண்டபம், ரன்மினிதன சினிமா தளம் ஆகியவற்றையும் பார்வையிட்டுள்ளனர். சுற்றுலாவின் முடிவில் சமய வழிபாட்டுத்தலமான கதிர்காமத்திற்கு சென்று சமய வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.புனர்வாழ்வு பெற்று வரும் உறுப்பினர்களுக்கு போரின் போது இடம்பெற்ற வடுக்களை இல்லாமல் செய்யவும் மற்ற சமூகங்களில் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்ற முறையினை நேரடியாக புரிந்து கொள்ளவுமே இவ் நல்லெண்ண சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது என  அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் நிமல் கொராவலகெதர தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire