samedi 22 septembre 2012

1000 நாட்டுப் படகுகளில்,10,000 மீனவர்கள் படகுகளில் நின்றபடியே கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி முழக்கங்கள்


கூடங்குளம்: மீனவர்களின் முற்றுகைப் போராட்டத்தால், கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் 

கூடங்குளம் அணு உலையில் விபத்து நிகழ்ந்தால், அதனால் ஏற்படும் கதிர்வீச்சால் பாதிக்கப் படப் போகும் இடங்களைக் குறிக்கும் வரைபடம்
தூத்துக்குடி: கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி, தூத்துக்குடி சரக்கு துறைமுகத்தை முற்றுகையிட சென்ற மீனவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, 300 விசைப் படகுகள் மற்றும் 1000 நாட்டுப் படகுகளில், தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகையிட 10,000 மீனவர்கள் புறப்பட்டுச் சென்றனர். படகுகளில் முற்றுகையிடச் சென்ற மீனவர்கள், துறைமுக நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

மேற்கொண்டு மீனவர்கள் துறைமுகத்தை நோக்கி முன்னேறிச் செல்லாதபடி கயிறு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து படகுகளில் நின்றபடியே கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலோர காவல்படை, கடற்படையின் கப்பல் மூலம் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தூத்துக்குடி கடல் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.....திராவிட போராட்டம் போன்றூ  மாற்ற வேண்டும்

Aucun commentaire:

Enregistrer un commentaire