jeudi 20 septembre 2012

டில்லி விமான நிலையத்தில் இறங்கினார் மஹிந்தர்.


இந்தியாவுக்கான மூன்றுநாள் ராஜாங்க விஜயத்தை மேற்கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி டில்லி சென்றடைந்தார். சிறப்பு விமானம் மூலம் சென்ற அவர் பயணிகள் விமான நிலையத்துக்கு செல்லாமல், இந்திய விமானப்படைக்கு சொந்தமான பாலம் ஏர்-ஸ்டேஷனில் தரையிறங்கினார். ஜனாதிபதி குழுவினரை இந்திய நாடாளுமன்ற திட்டமிடல் மற்றும் அலுவல்கள் அமைச்சர் அஷ்வினி குமார் வரவேற்றார். 

டில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜனாதிபதி குழுவினர் தங்குவதற்கான ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்புகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் இவ்விஜயம் ஓர் தனிப்பட்ட விஜயமாகவே ஆரம்பத்தில் இருந்துது. விஜயத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என இந்தியாவில் எழுந்த எதிர்ப்பலைகள் அவர் விஜயத்தை உத்தியோகபூர்வ விஜயமாக மாற்றியது. 

மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபாவில் புத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தனிப்பட்ட பயணமாக அவர் செல்லவிருந்தார். பயணம், மத்திய அரசின் அழைப்பு அற்ற தனிப்பட்ட பயணம் என்ற விதத்தில், தடுக்கப்படலாம் என்ற சாத்தியம் இருந்தது.

இதையடுத்து, ஜனாதிபதியின் பயணம், மூன்று நாள் ராஜாங்க விஜயமாக மாற்றப்பட்டது.

அந்த விதத்தில், மத்திய அரசின் அழைப்பில் இன்று இந்தியாவில் இறங்கியுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷே, நாளை (வியாழக்கிழமை) காலை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார். நாளை மாலை பிரதமர் மன்மேபகன் சிங்குடன் சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. 21-ம் தேதி, சிறப்பு விமானம் மூலம், சாஞ்சி செல்கிறார்.

இதற்கிடையில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொண்டர்கள் சகிதம் பஸ்களில் சென்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அணியினர் சென்ற பஸ்கள், ராஜபக்ஷ அரசு விருந்தினராக டில்லியில் இறங்கிய அதே தினமான இன்று, மத்தியப் பிரதேச மாநில எல்லையை அடைந்தன.

அங்கு மகாராஷ்டிரா – மத்தியரப் பிரதேச எல்லையில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பந்துர்னா என்ற சிறு நகரத்தில் அவர்கள் அனைவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அதற்கு மேல் பயணம் செய்ய முடியாது என்று தடை போடப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire