lundi 17 septembre 2012

பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 6 சத வீதத்தால் அதிகரிப்பு


சிறீலங்காவில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 6 சத வீதத்தால் அதிகரிப்பு
news
சிறீலங்காவில் சிறுவர்கள், பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் 6 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஒன்லைன் உதயன் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
முன்னைய காலத்தை விட தற்போது சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றது.

கடந்த வருடம் 1775 ஆக இருந்த  பாலியல் துஸ்பிரயோகம் இவ் ஆண்டு மேலும் 6 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

குறிப்பாக அநுராதபுரம்,இரத்தினபுரி மற்றும் குருநாகல் பிரதேசங்களிலே இவ்வாறான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்

இலங்கையில் வருடாந்தம் சுமார் 750 மனித கொலைச் சம்பவங்கள் பதிவாகிறது எனவும் இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்த போர்ச் சூழலில், நாட்டில் வருடாந்தம் சுமார் ஆயிரத்து 500 மனித படுகொலைச் சம்பவங்கள் பதிவானதாகவும்,

இதற்கமைய தற்போதைய புள்ளிவிபரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது குற்றச்செயல்களில் அதிகரிப்பு காணப்படவில்லை எனவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்

Aucun commentaire:

Enregistrer un commentaire