vendredi 7 septembre 2012

சிங்களவர்களோடு தமிழர்கள் கைகோர்த்துகொண்டு வந்ததால்தான் தாக்கினோம்… இனவாதி வை.கோ

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற பெருமளவிலான வன்முறைகளுக்கு எதிராக சிங்களவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றும் அதற்கு எதிர்ப்பு காட்டும் விதமாகவே தமிழகம் வந்த இலங்கை யாத்ரிகர்களுக்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
ஈழத்தில் இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசு குறித்து மூச்சுவிடக்கூடத் துணிவற்ற இந்ததச் சந்தர்ப்பவாத இனவாதி, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அதற்கு வேறு நியாயம் சொல்கிறார். அவமானகரமான அரசியல்.
திருச்சியில் தாக்குதலுக்குள்ளானவர்கள் பலர் தமிழ் கிறிஸ்தவர்கள் என்று சுட்டிக் காட்டியபோது, சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொண்டு தமிழர்கள் ஏன் வர வேண்டும் என்று அவர் கேட்டார்.
சிங்கள மக்களுக்கும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை ஏற்படுவதைக் கூட விரும்பாத வை.கோபாலசாமி போன்றவர்கள், இந்த மோதலில் ஏற்படும் அழிவுகளை முன்வைத்தே தமது பிழைப்புவாத அரசியலை நடத்துகிறார்கள்.
இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதையும் அதற்கான குறைந்தபட்ச ஆதரவாவது சிங்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து கிடைப்பதையும் விரும்பாத அப்பட்டமான இனவாதிகள் ஈழப்போராட்டத்தில் இடையே நுளைந்துகொண்ட சாபாக்கேடு.

Aucun commentaire:

Enregistrer un commentaire