mardi 22 janvier 2013

மீனவர் விவகாரம் 200 பேர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு.மகிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளார்


இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் பேச ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கு மீனவர்களை நாளை சந்திக்கவுள்ளார். இதற்கென தெரிவு செய்யப்பட்ட அரச ஆதரவு மீனவாகள் 200 பேர் யாழ்ப்பாணத்திலிருந்தும்  கொழும்பு சென்றடைந்துள்ளனர்.
இதனிடயே போருக்கு பின்னரான வட மாகாண கடற்றொழில் சமூகங்கள் தொடர்பாகவும் இந்திய இழுவைப் படகுகளினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் பல்கலைக்கழகங்கள் கவலை வெளியிட்டுள்ளன. 
இலங்கையின் வடபிராந்தியத்தில் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவக்குடும்பங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் ரு{ஹணு பல்கலைக்கழகங்கள் இணைந்து செயலமர்வு ஒன்றை யாழ்பல்கலைக்கழக வளவினுள் நடத்தியுள்ளன. இந்திய இழுவைப் படகுகளால் எற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தொடர்பாகவும் இந்த செயலமர்வில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
யாழ்பபாண பலகலைக்கழகத்துடன் சோந்து ரு{ஹணு பல்கலைக்கழகம், அபிவிருத்திக் கற்கைகளுக்கான சென்னை நிறுவகம், மற்றும் ஆம்ஸ்ரடம் பல்கலைகழகம் ஆகியன இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டிருந்தன.
வடமாகாண கடற்றொழில் சமூகம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார அழிவுகள் குறித்து செயலமர்வில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போர் காலப் பகுதியில் கடலுக்கு செல்ல முடியாமல் இருந்த இந்த சமூகம், வட பிராந்திய கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளால் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீன்பிடி வலைகளின் அழிவினால் ஏற்பட்டுள்ள பாரிய நிதி இழப்புக்கள், இந்திய இழுவைப் படகுகள் கடலில் சஞ்சரிக்கும் காலப் பகுதிகளில் கடலுக்கு செல்ல முடியாத நிலைமை ஆகிய விடயங்கள் குறித்து செயலமர்வில் கலந்துரையாடப்பட்டுள்ளது.அத்துடன் கடல்வள மூலங்களின் பாரிய அழிவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இந்த செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire