jeudi 24 janvier 2013

நாடு முழுவதும் 74.000 கிலோ போதைப் பொருட்கள் மீட்பு. சந்தேகத்தின் பேரில் 41.922 பேர் கைது.



வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் 2012 ஜனவரி முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் சுமார் 74.000 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.இச் சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது இவற்றோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் 41.922 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
ஹெரோயின், கெனபிஸ், கஞ்ஜா, கொகெய்ன், ஹமஸ் மற்றும் மெதம்பெடமின் போன்ற பல கோடி ரூபாக்கள் பெறுமதியான பல்வேறு வகையான போதை வஸ்து பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.வடக்கு, கிழக்கு, கொழும்பு உட்பட நாடு முழுவதிலும் விமான நிலைய, சுங்க திணைக்கள, கலால் திணைக்கள அதிகாரிகள், சிறைச்சாலைகள், பொலிஸ் போதைப்பொருள் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படை யினர், மற்றும் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விதமான நடவடிக்கையின் போதே பல விதமான 74 ஆயிரம் கிலோ எடையுள்ள போதைப் பொருட்களையும், 41 ஆயிரத்து 922 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
ஒப்பீட்டளவில் கடந்த 2012 ஆம் ஆண்டு போதை வஸ்து பொருட்கள் கைப்பற்றப்பட்ட வீதமும், சந்தேக நபர்களை கைதுசெய்த வீதமும் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.இதனடிப்படையில் 33 கிலோ 263 கிராம் எடையுள்ள ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 10,808 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். 73 ஆயிரத்து 871 கிலோ 682 கிராம் கெனபிஸ் கஞ்ஜா கைப் பற்றப்பட்டுள்ளதுடன் 31,093 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 கிலோ 520 கிராம் கொகெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 484 கிராம் ஹமஸ¤டன் 5 சந்தேக நபர்களும், 3 கிலோ 780 கிராம் எடையுள்ள மெதம்பெடமின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 4 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

Aucun commentaire:

Enregistrer un commentaire