dimanche 13 janvier 2013

இலங்கையில் அனைத்து வகையான மருந்துகளுக்கும் தடை ஊசிமருந்தில் கண்ணாடித்துண்டு

  இந்திய நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான மருந்துகளுக்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தடை விதித்துள்ளார். 

   பயோமெற் பார்மசிற்றிக்கல்ஸ் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளொக்சசிலின் ஊசிமருந்தில் கண்ணாடித்துண்டு ஒன்று இருந்ததை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   இதையடுத்து கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் இருந்த, குறிப்பிட்ட இந்திய நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட 600 மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன.

   அத்துடன் அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் தொற்றுக்கு எதிரான குளொக்சசிலின் ஊசிமருந்து பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

   இந்த விவகாரம் குறித்து உடனடி விசாரணை நடத்துவதற்கான குழுவொன்றை சுகாதார அமைச்சர் நியமித்திருந்தார்.

   அந்தக் குழுவின் விசாரணையில், ஊசிமருந்தில் கண்ணாடித் துண்டு இருந்தது மோசமான உற்பத்தித் தவறு என்றும், அது நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் தெரியவந்தது.

   இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரிலேயே பயோமெற் பார்மசிற்றிக்கல்ஸ் நிறுவனத்தை கறுப்புப்பட்டியலில் சேர்க்கும் முடிவை சுகாதார அமைச்சர் எடுத்துள்ளார்.

   இலங்கையில் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்களில் 70 வீதமானவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire