mardi 15 janvier 2013

கொழும்பு நகரில் இரவு உணவு விற்பனை நிலையங்கள் குறித்து அவதானம்!

கொழும்பு நகரில் இரவு வேளைகளில் மாத்திரம் தற்காலிகமாக நடத்திச் செல்லப்படும் உணவு விற்பனை நிலையங்கள் தொடர்பில், கொழும்பு மாநகர சபை கவனம் செலுத்தியுள்ளது. 

குறித்த உணவு விற்பனை நிலையங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாநகரசபையின் சுகாதாரப்பிரிவு கூறியுள்ளது. 

குறிப்பாக இந்த விற்பனை நிலையங்களில் உரிய தரத்தில் உணவுகள் தயாரிக்கப்படுவதில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் எதிர்வரும் காலங்களில் இந்த விற்பனை நிலையங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதன்படி அசுத்தமான முறையில் உணவுகளை விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire