samedi 19 janvier 2013

சந்திரிகா.புதிய போராளிக் குழு உருவாவதை தவிர்க்க முடியாது

இலங்கை அரசின் கொடூர அடக்குமுறைகள் தொடர்ந்தால் புதிய போராளிக் குழு அங்கு உருவாவதை தவிர்க்க முடியாது. என்று நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.

நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மஹிந்த ராஜபக்ஷவின் தாக்குதல் இப்போது சர்வதேச சமூகத்தில் மிகப் பெரிய விவகாரமாக வெடித்திருக்கிறது. 

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையம் இதைப் பற்றி விசாரனை செய்து கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் நெடுங்காலமாக பாரபட்சமாக நடத்தப்பட்டனர். அதனால் அவர்கள் தமது உரிமைகளைக் கோரினர். அவர்களின் உரிமைகளை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது தலைமையிலான அரசாங்கம் முயற்சித்தது. 

தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கக் கூடிய முழுமையான ஒரு கூட்டாட்சியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எனது அமைச்சரவையில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ மட்டும்தான் கடுமையாக எதிர்த்தார். 

அவரைப் பொறுத்தவரையில் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்பதுமட்டுமே இலக்காக இருந்தது. தற்போது புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் இணைந்து கொண்டுள்ளனர். தமிழர்கள் மீதான எந்த ஒரு தாக்குதலையும் கண்டிக்கின்றனர். இலங்கை அரசாங்கம் இப்படியே செயல்பட்டுக் கொண்டிருந்தால் இலங்கையில் புதிய போராளிக் குழு உருவாது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். 

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகப் பெரிய ஊழல்களை செய்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2000 பேர் அரசுப் பதவிகளில் உள்ளனர். நான்கு சகோதரர்கள் அமைச்சரவையில் உள்ளனர். அவர்களின் பிள்ளைகள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். இது இலங்கைக்கு கேடு விளைவிக்கும் என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire