dimanche 13 janvier 2013

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி முருகன் - நளினி மீண்டும் சந்திப்பு


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முருகன் - நளினி தம்பதிகள் 48 நாட்களின் பின்னர் சந்தித்து பேசியுள்ளனர்.  வேலூர் சிறைச்சாலையிர் பொலிஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.1 1/2 லட்சம் பணம் செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி முருகன் அறையில் இருந்து சிம்கார்டு, மெமரிகார்டு, ஹெட்போன் சிக்கியது. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி முருகன் பெண்கள் ஜெயிலில் இருக்கும் அவரது மனைவி நளினியை சந்திக்க தடை செய்யப்பட்டது. கடைசி யாக நவம்பர் 24ஆம் திகதி நளினி - முருகன் சந்திப்பு நடந்தது. மேலும் முருகனை உறவினர்கள் பார்வையாளர்கள் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டது.
முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 48 நாட்கள் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் சிறைதுறை நன்னடத்தை விதியின் கீழ் எடுக்கபட்ட தடை நீக்கபட்டுள்ளது. இதனை யடுத்து பெண்கள் ஜெயிலில் உள்ள நளினியை முருகன் நேற்று சந்தித்து பேசினார். காலை 8.30 மணி முதல் 9 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
வேலூர் ஆயுதபடை டி.எஸ்.பி. ரமேஷ் தலைமையிலான பொலிசார் முருகனை பெண்கள் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர். முருகன்- நளினி சந்திப்பையொட்டி சிறைச்சாலை வட்டாரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Aucun commentaire:

Enregistrer un commentaire