lundi 21 janvier 2013

பில்கேட்ஸ்.பணத்தால் எனக்கு பயன் இல்லை

லண்டன்: ""பணத்தால் எனக்கு பயன் இல்லை,'' என, உலகின் பெரும் கோடீஸ்வரரான, பில்கேட்ஸ் தெரிவித்து உள்ளார்.உலகின், பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில்கேட்ஸ் இது குறித்து கூறியதாவது: உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளை பொறுத்தவரையில், நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுக்கு மேல்என்னிடம் பணம் இருந்து பயனேதுமில்லை. ஒரு அமைப்பை உருவாக்கி, அதில் என் பணத்தை எல்லாம், உலக ஏழை எளிய மக்களுக்காகச் செலவிட விரும்புகின்றேன்.போலியோவை ஒழித்ததுபோல், பல்வேறு நோய்களால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு, நோய்தடுப்பூசி மற்றும் சுகாதாரப் பணிகளில் தொண்டாற்றும் பெண்களுக்கும் என் பணத்தைச் செலவழிக்கத் தீர்மானித்து உள்ளேன்.கடந்த, 1990ம் ஆண்டில், ஐந்து வயதைத் தாண்டாத, 1.20 கோடி குழந்தைகள் நோயால் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால், 70 லட்சமாகக் குறைந்து உள்ளது. இதேபோல், குழந்தைகளை தாக்கும் கொடிய நோய்களில் இருந்து, அக்குழந்தைகளை பாதுகாக்கவும், நோய்களை அழிக்கவும், அறக்கட்டளை மூலமாக, என் பணத்தைச் செலவிட முடிவு செய்துள்ளேன். இவ்வாறு, பில்கேட்ஸ் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire