vendredi 25 janvier 2013

அரசு கடும் நடவடிக்கை ரம்புக்வெல அறிவிப்பு-


-இலங்கையில் இனங்களுக்கு இடையில் மீண்டும் மோதல் ஒன்றை உருவாக்கும் நோக்கில் சில தீவிர அமைப்புக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமாக கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு இன்று பிற்பகல் தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவி;த்தார். இது பற்றி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
இலங்கையில் இனங்களுக்கு இடையில் மீண்டும் மோதல் ஒன்றை உருவாக்கிவிட்டு அதற்காக அரசின் மீது பழிசுமத்தும் முயற்சியில் சில அமைப்புக்கள் திட்டமிட்;டு இயங்கிவருவதாக அரசாங்கத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அந்த அமைப்புக்களின் செயற்பாடுகளை நேரில் காணக்கூடியதாகவும் உள்ளது. முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றி அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
சிங்கள மற்றும் பௌத்த அமைப்புக்களால் வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்திவருகின்றது.
யுத்தம் காரணமாக சீரழிந்துபோயிருந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் இந்த நோரத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஓரக்கண்ணால் தவறாக நோக்கும் சிலரில் இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
இவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கும் அளவுக்கு இதுவரையில் காத்திரமான சாட்சியங்கள் இல்லாதபோதும் இவர்களது நடவடிக்கைகளுக்கு பலமான  பிண்ணனியிருப்பது தெரியவந்துள்ளது.
எனவேதான் இன மோதல்களைத் தடுக்கும் முதல் நடவடிக்கையாக ஊடகங்கள் எமது தேசிய ஒருமைப்பாட்டை நினைவில் வைத்து பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
இனங்களுக்கு இடையில் பேதங்ளையும் மோதல்களையும்  தூண்டுவோருக்கு எதிராக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire