vendredi 25 janvier 2013

இலங்கையில் தமிழர் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை; ஏ.கே.அந்தோனி


இலங்கையில் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் இப்போது இந்தியாவில் சுற்றுப்பணயணம் மேற்கொண்டுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை. அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகாரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனியிடம் ஜி.எல்.பெரிஸின் கருத்து குறித்து தில்லியில் செய்தியாளர்கள் புதன்கிழமை கேட்டனர். அதற்குப் பதிலளித்து அவர் கூறியது:
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை. இலங்கையில், அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த ஒருபுறம் தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்து கொள்வோம்.
எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம். அதேசமயம், மற்ற பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம் என்றார் அந்தோனி.

Aucun commentaire:

Enregistrer un commentaire