mercredi 23 janvier 2013

48 பணயக்கைதிகள்-29 தீவிரவாதிகள் பலி .அல்ஜீரியா எரிவாயு தொழிற்சாலை சண்டையில்


அல்ஜீரியாவில் சில நாட்களுக்கு முன்பு லிசி பகுதியில் உள்ள இன் அமெனாஸ் எரிவாயு தொழிற்சாலையில் வேலைபார்த்த வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோரை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு தோல்வியுற்ற நிலையில் அவர்களை மீட்கும் முயற்சியில் ராணுவம் இறங்கியது. கடந்த நான்கு நாட்களாக பணயக் கைதிகளை மீட்கும் பொருட்டு இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்தது. இதில் வெளிநாட்டினர் 37 பேர் உள்பட 48 பணயக்கைதிகள் இறந்தனர். 29 அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 3 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர்.
இன்னும் சில பணயக்கைதிகள் குறித்து விவரம் கிடைக்கவில்லை என்று பிரதமர் அப்தெல்மாலெக் செல்லல் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire