vendredi 18 janvier 2013

விடுதலை விடயத்தில் முன்னுரிமை - புதிய பிரதம நீதியரசர்

news
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் முன்னுரிமையளித்து செயற்படப்போவதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நேற்று உறுதியாகத் தெரிவித்தார்.
 
புதிய பிரதம நீதியரசராகப் பதவியேற்ற கையோடு " கருத்து வெளியிட்ட மொஹான் பீரிஸ், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பாராமுகமாக இருந்துவிட முடியாதென்றும் குறிப்பிட்டார்.
 
"நாடு சமாதானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகாண வேண்டும். அதில் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமும் முக்கியமானது.
 
அவர்களின் வழக்குகள் துரித விசாரணைக்கு உட்படுத்தப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து நான் முன்னுரிமையளித்து செயற்படத் தீர்மானித்துள்ளேன்'' என்றார் மொஹான் பீரிஸ்.
 
நீதித்துறையின் கட்டமைப்பு மறுசீரமைக்கப்படும் செயற்றிட்டங்கள் உள்ளனவா என்று கேட்டபோது பதிலளித்த அவர், "நிச்சயமாக, நீதித்துறையினூடாக அனைத்து மக்களுக்கும் நேர்மையான சேவையை மேற்கொள்ள என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்'' என்றார் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ். 
 
இதேவேளை, புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வடக்கு, கிழக்குக்கான பயணமொன்றை மேற்கொண்டு அங்குள்ள நீதித்துறைக் கட்டமைப்புகள் குறித்தும், அங்கு தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாட உத்தேசித்துள்ளதாக அறியமுடிகின்றது

Aucun commentaire:

Enregistrer un commentaire