samedi 24 novembre 2012

பொதுமக்களை எல்.ரீ.ரீ.ஈ மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப் போகிறது என்பதை ஐநா 2008ம் ஆண்டே அறிந்திருந்தது.


lanka-warகடந்த வாரம் நாங்கள் காலச்சக்கரத்தில் சற்று பின்நோக்கி அனுப்பப் பட்டுவிட்டதை போன்ற ஒரு உணர்வே எனக்கு ஏற்பட்டது. நாங்கள் திரும்பவும் 2009ம் ஆண்டின் மோசமான அந்த முதல் ஆறுமாத காலப்பகுதிக்குள் திரும்பவும் வந்திருந்தோம், அதேவேளை வன்னியில் மோசமான யுத்தவலயத்துக்குள் அகப்பட்டிருந்த மக்களின் கோரமான நிலையையும், அதற்கு சர்வதேச சமூகம் பதிலளித்த விதத்தையும் எண்ணி நான் விரக்தியும் வேதனையும் அடைந்தேன்.
நிச்சயமாக நாம் அனைவரும் யுத்தம் நிறுத்தப்படுவதையே விரும்பினோம். வன்முறையை நான் அடியோடு வெறுக்கிறேன். ஆனால் பின்னர் நான் விவாதித்ததும் மற்றும் தொடர்ந்து நம்பியதும், எல்.ரீ.ரீ.ஈயின் தோல்வியோடுதான் போர் நிறைவடையப் போகிறது என்பதையே.
ஈழம் என்பதை பிரபாகரன் கை விடமாட்டார். அவர் சிறைப் பிடிக்கப்படும் வரை, அல்லது கொல்லப்படும் வரை, ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் மற்றும் அதன் சமூகங்களுக்கும் எதிரான தீவிர பிரச்சாரத்தை அவர் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கப்போகிறார். எனவே எங்கள் பணியானது இழப்புகளை குறைக்கவேண்டியதேயாகும். இயன்றவரை குறைவான மரணங்கள் மற்றும் இழப்புகளுடன் அது செயற்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கு நாம் முயற்சி செய்யவேண்டும்.
இந்த கருதுகோளில் ஐநா கவனக்குறைவாக நடந்துகொண்டது என்பது உறுதி. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஐநாவின் செயற்பாடுகளைப்பற்றிய உள்ளக ஆய்வுக் குழுவினரின் அறிக்கை பான் கீ மூன் அவர்களால் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ தோல்வி அடையப் போகிறது என்பதை ஜனவரி மாத இறுதியிலேயே ஐநா உணர்ந்திருந்தது என்று அது தெரிவிக்கிறது. மற்றும் அது ஒரு சரியான வேலையை செய்திருந்தது. சரணடைவதை பற்றிய ரு திட்டத்தை அது வகுத்திருந்தது.
இது அநேக உயிர்களை காப்பாற்றியிருக்கும்.
அது எவ்வளவு என்று அறிந்து கொள்வதில் சிலருக்கு அதிக ஆர்வம் இருக்கலாம். அவர்கள் பணியாற்றிய மிகவும் கடினமான சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது நியாயமான அடிப்படையில் ஐநாவின் கணக்கு 7,337 ஆகும். அந்த எண்ணிக்கை முழுத் தொகையின் மிகவும் சிறிய ஒரு பின்னம் என்று நான் நினைக்கிறேன், அந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்திருக்கும்.
இந்த சரணடையும் திட்டம் பெப்ரவரி ஆரம்பத்தில் எல்.ரீ.ரீ.ஈ முன் கொண்டுவரப் பட்டது, அனால் அது நிராகரிக்கப்பட்டது. அப்போது எல்.ரீ.ரீ.ஈ கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரண்டிலும் தோல்வியடைந்திருந்தது, ஆனால் பிரபாகரன் தளர்வு காட்ட மறுத்துவிட்டார். பின்னர் ஆனந்தபுரம் சமரில் தனது மூத்த தளபதிகள் பலரையும் இழந்தபோதும்கூட, மீண்டும் ஏப்ரல் மாதம் அவர் சரணடையும் திட்டத்தை நிராகரித்தார். தாக்குதலற்ற வலயத்துக்குள் அவர் அகப்பட்டிருந்தார் ஆனாலும் இன்னமும் தவிர்க்கமுடியாத சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கவில்லை.
சிலபேர் சந்தேகமின்றி அதுதான் உயர்ந்த வீரத்தின் பண்பு என்று கருதலாம். ஆனால் மோதல் வரலாற்றில் அதுதான் மிகப்பெரிய குற்றம்.
ஒரு மாபெரும் படுகொலைகளின் நிகழ்வு இடம்பெறுவதையே பிரபாகரன் விரும்பினார்.
அவரின் மூலோபாயத் தந்திரம் ஒரு அசாதாரணமான மனிதாபிமான பேரழிவை உருவாக்குவதே, அப்போதுதான் சர்வதேச சமூகம் கட்டாயமாக தலையிட வேண்டும் என்பதை உணரும். நீண்ட நாட்களுக்கு முன்னரே, தன்னால் ஸ்ரீலங்கா படைகளுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாது என்பதை ஐநா உணர்ந்துவிட்டது என்று அவர் அறிந்திருந்தார்.அது ஒரு யுத்தம் என்று வந்தபிறகு எதையும் தெளிவாக புரிந்து கொள்ளாமலிருக்க அவர் ஒன்றும் முட்டாளல்ல. அதேபோல யுத்தத்தில் இறங்கியபிறகு சர்வதேச அரசியல் நிலவரங்கள் தெரியாத அளவுக்கு மதிநுட்பமற்ற ஒருவரல்ல பிரபாகரன்.
அந்தநேரம் நான் சொன்னேன் சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா விடயத்தில் தலையிடப் போவதில்லை என்று. ஆனால் அநேக மக்கள் வேறு விதமாக நினைத்தார்கள்.lankawar-1
அப்போது மேற்கு மனிதாபிமான யுத்தங்களுக்கான ஒரு பாணியை உருவாக்கியிருந்தது. 1999ல் மிலோசேவிக்கை, கொசோவாவிலிருந்து பின்வாங்கச் செய்வதற்காக அது சேர்பியாமீது வேண்டியளவு குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தது. பிறகு 2001ல் ஆப்கானிஸ்தானில்; தலிபானை துடைத்தழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது, மற்றும் 2003ல் அது ஈராக் மீது படையெடுப்பு  நடத்தி சதாம் ஹ_சேனின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல்கள் செப்ரெம்பர் 11ன் பின்னான பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தின் ஒரு பகுதியாகும், ஆனால் இது மேற்கத்தைய பொதுமக்களுக்கு பின்வருமாறு விளக்கப்பட்டது, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள், உலகின் ஏனைய பகுதியினருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி தனது சொந்த மக்களுக்கு எதிராகவும் அடக்குமுறையை எற்படுத்துகின்றன என்று. பிரபாகரன் தாக்குதலற்ற வலயத்துக்குள் ஊடுருவியிருந்த வேளையிலும் அந்த யுத்தங்கள் அப்போதும் நடந்துகொண்டுதான் இருந்தன, ஆனால் அங்கெல்லாம் ஏற்கனவே ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. மற்றும் கொசோவா தனது கனவு நனவாகும் பாக்கியத்தை பெற்றிருந்தது. 2008ல் அது ஒரு சுதந்திர தனிநாடாக பிரகடனப்படுத்தப் பட்டுவிட்டது.
மேற்கத்தைய அரசியல்வாதிகள் தலையீடு செய்வதற்கு வேறு பல நோக்கங்கள் இருந்தன, ஆனால் ரூவாண்டாவை போல மற்றொரு நிலை உருவாகாமல் உலகத்தை காப்பாற்றுவதற்காகவே தாங்கள் போராடுவதாக அவர்கள் எப்போதும் சொல்லிக் கொண்டார்கள். இதனால்தான் மேற்கத்தைய படைகளை ஸ்ரீலங்காவுக்கு வரவழைக்கலாம் என்று பிரபாகரன் நினைத்தார்.
இதற்காக யாரோ எங்கேயோ நிச்சயமாக பழிச்சொல் கேட்பதற்கு உரியவராக இருப்பார்கள்.
ஐநா தவறான கருத்துள்ள பங்களிப்பை ஆற்றியுள்ளது, ஆனால் இதற்காக உண்மையில் குற்றவாளியாக வேண்டியவர்கள் நிச்சயமாக இந்த மனிதாபிமானப் போர்களை ஆரம்பித்து வைத்த மேற்கத்தையவர்கள்தான்.நாங்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டால் மட்டுமே எங்களால் எப்பொழுதும் கொலைகளை தடுக்க முடியும் என்பதுதான் நம்புவதற்கு சௌகரியமானதாக இருக்கும். அதிகாரமற்றவர்களாக இருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். எனினும் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ஏன் கொசோவாவில் கூட மனிதாபிமானப் போர்கள் அதிக மக்களை காப்பாற்றுவதைக் காட்டிலும் அதிகம் Nபுர்களை கொன்றிருக்கிறது. மேற்கத்தைய படைகள் ஸ்ரீலங்காவில் கால் வைத்திருந்தால்கூட விளைவு சரியாக இதேபோலத்தான் இருந்திருக்கும்.
அதனால்தான் மேற்கு ஸ்ரீலங்காவில் தலையீடு செய்யாது என்று நான் சொல்லியபோது, அதை சற்று மன ஆறுதலுடன் சொன்னேன். ரூவாண்டா மிகவும் விசேடமான ஒரு விடயம்.
மேற்கானது அடிக்கடி ரூவாண்டாவின் ஞ}பகத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்திருந்தால், பிரபாகரன் வேறு வித்தியாசமான ஒரு தந்திரத்தை தெரிவு செய்திருப்பார். ஒரு பிரதேசத்தை பிடித்து வைத்திருக்கும்; திட்டத்தை அவர் கைவிட்டிருப்பார்.
lankawar-3சிறிய நிலப்பகுதிக்குள்  பின்வாங்கிச் செல்லும்போதெல்லாம், 300,000 மேற்பட்ட பொதுமக்களை துப்பாக்கி முனையில் தன்னுடன் இழுத்துச் சென்று, கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அவர்களை படையில் கட்டாயமாக இணைத்து சாவதற்காக அவர்களை யுத்த முனைக்கு அனுப்பிவைக்கும் அதேவேளை எஞ்சியவர்களை பதுங்கு குழிக்குள் மிகவும் சிறிதளவு உணவு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட மருத்;துவ வசதிகள் என்பனவற்றுடன் பதுங்கி இருக்கும்படி கட்டாயப்படுத்தி, மற்றும் அவர்களுக்கு மத்தியில் இருந்து அவரது அங்கத்தவர்கள் ஸ்ரீலங்கா படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்யும்போது அந்த அப்பாவி மக்களின் தலைக்கு மேல் பேரழிவை தரும் குண்டுமாரியை கொட்ட வைத்ததுக்குப் பதிலாக அவர் காடுகளுக்கு திரும்பிச் சென்று கெரில்லா யுத்தத்தை ஆரம்பித்திருப்பார். (எதிர்கால சந்ததியினரை அணிதிரட்டி கொலைக்கு கொடுக்கும் அடிப்படையினைப் போல இல்லாமல் ,நிச்சயமாக இப்போதும் அவரால் இதேபோல செய்திருக்க முடியும். அவரைத்தவிர எஞ்சியிருக்கும் அனைவரும் மனித உயிருக்கு மதிப்பு கொடுப்பதைப் போல அல்லாது, அவர் மனித உயிர்களுக்கு அதிகம் அக்கறை கொடுப்பவரல்ல).
ஐநாவின் உள்ளக ஆய்வுக்குழுவின் அறிக்கை, அப்போது ஸ்ரீலங்காவில் ஐநாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர், ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் கையாளவேண்டிய அரசியற் புரிந்துணர்வுத் தன்மை குறைவாக கொண்டிருந்தார் என்று அவர்மீது கண்டனம் தெரிவித்துள்ளது, ஆனால் அது ஏற்றுக் கொள்ளத் தவறியதும் இன்னும் விடை தராத கேள்வியாகவும் உள்ளது, பிரபாகரனை எப்படி கையாண்டிருக்க வேண்டும் என்பதுதான். இன்னமும் அது ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாகவே உள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப் போகிறது என்பது ஐநாவுக்கு 2008ம் ஆண்டே தெரியும். எல்.ரீ.ரீ.ஈ தனது செயல்பாடுகளின் பாதுகாப்புக்காகவும் மற்றும் உடன்படிக்கைகளுக்கு மாறாக அதனை மீறி, தனது வசதிகளை ஐநா அலுவலகத்துக்கு அருகில் நிலைநிறுத்திக் கொள்வதற்கும், கிளிநொச்சியில் ஐநாவின் பிரசன்னத்தை தொடர்ந்து பயன்படுத்த முயற்சித்தது என்பதை அந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. ஐநா வன்னிப் பிரதேசத்தை விட்டு உத்தியோகபூர்வமாக விலகியபோது, அதன் உள்நாட்டு அலுவலர்கள் 17 பேரை அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டியிருந்தது, ஏனெனில் அவர்களில் தங்கியிருப்பவர்களான 86 பேர்களை எல்.ரீ.ரீ.ஈ பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தது, என்பதனையும் அந்த அறிக்கை ஏற்றுக் கொண்டுள்ளது. 2008ல் ஸ்ரீலங்கா படைகள் முகம் கொடுத்துள்ள அசாத்திய நிலைபற்றி ஐநா அறிந்திருந்தது.
அப்படியானால் 2009ல் அதைவிட சிறப்பாக அதனால் என்ன செய்திருக்க முடியும்?
டேவிட் மிலிபான்ட் மற்றும் ஸ்ரீலங்காவில் தங்களது மூக்கை நுழைத்திருந்த இதர மேற்கத்தைய அரசியல்வாதிகள் ஆகியோரிடம், அவர்களுடைய பொறுப்புள்ள நடவடிக்கை, சரணடைவதை தவிர வேறு தெரிவு இல்லை என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வைப்பது எப்படி?
இல்லை,அப்படியான ஒரு சாத்தியக்கூறுபற்றி அதில் குறிப்பிடப்படக்கூட இல்லை.
ஆறுமாத வேலைகளுக்குப் பிறகு,ஐநா நிபுணர்கள் கொண்டுவர முடிவு செய்திருக்கும் உயர்ந்த திட்டம், அந்த சமயத்தில் சர்வதேச சமூகம் செய்த அதே தவறைத்தான் திரும்பவும் செய்கிறது. அது எல்.ரீ.ரீ.ஈயை அலட்சியம் செய்கிறது.
அதற்குப் பதிலாக, பிரபாகரனிடம் அவர் அவரது சொந்த விருப்பத்தில் மட்டுமே செயற்படுகிறார் என்பதை அவருக்கு தெளிவாக விளக்கியிருந்தால் அது சிலவேளைகளில் அவரை மீண்டும் சிந்திக்கத் தூண்டியிருக்கும், உள்ளக ஆய்வுக் குழுவின் அறிக்கை, ஐநா ஸ்ரீலங்காபடைகள் மீதான அழுத்தத்தை அதிகரித்திருக்க வேண்டும் என பிரேரித்துள்ளது.
அது விவாதிப்பது, ஐநா  மின்னஞ்சல் வழியாக தான் பெற்ற மரணங்களின் தொகையை பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டும், மற்றும் பெரும்பாலான மரணங்கள் ஸ்ரீலங்காபடைகளின் ஷெல் வீச்சுக்களினாலேயே இடம்பெற்றது என்று அது நம்பியதையும் முன்னிலைப் படுத்தியிருக்க வேண்டும் என்று.
 ஸ்ரீலங்கா அரசாங்கம் போர்க்குற்றம் புரிகிறது என்பதை கடுமையான எச்சரிக்கை மூலம் ஐநா அதனிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது உயிர்களைக் காப்பாற்றியிருக்கும் என்று அது சொல்கிறது. ஆனால் எப்படி? சநதேகமில்லாமல் கோடன் வைஸைப் போன்றவர்கள் தாங்கள் அப்படிச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என உணருவார்கள்தான். ஆனால் அது உண்மையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்?
பெப்ரவரி ஆரம்பத்தில் மூன்று வார கால எல்லைக்குள் சுமார் 1,000 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் என்பது ஐநாவுக்கு நிச்சயமாகத் தெரியும். அடுத்த நான்கு வாரங்களுக்குள்  மார்ச் மாத ஆரம்பத்தில் இந்த எண்ணிக்கை சற்று உயர்ந்து 1,500யும் தாண்டியது.
இந்தக் கட்டத்தில்   ஏற்கனவே ஸ்ரீலங்கா படைகள்மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப் பட்டது, எங்கள் அனைவருக்கும் நிச்சயமாக நன்றாக நினைவிருக்கும் . எல்.ரீ.ரீ.ஈ யின் பிரச்சார இயந்திரம் இன ஒழிப்பு பற்றிய அதன் அதிரடிக் காட்சிகளை வெளியிட்டதுடன், மேற்குலகம் முழவதும் அது ஆர்ப்பாட்டங்களை ஒழுங்காக மேடையேற்றியது.
அடுத்த ஆறுவாரங்களான ஏப்ரல் கடைசியில் ஐநா வின் மரணக்கணக்கு மற்றொரு 5,000 வரை உயர்ந்தது.
நிச்சயமாக இது பயங்கரமான ஒரு கணக்கு என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் சாதாரணமாக அதைப்பற்றி வருத்தப்படுவதால் மட்டும் மக்கள் கொல்லப்படுவதை தடுத்துவிட முடியாது.
அழுத்தம் என்பது சரியான திசையில் பிரயோகித்தால் மட்டுமே பயன் தரும். சர்வதேச சமூகம் செய்தது என்னவென்றால், ஒரு தலைமுறை நீண்ட மோதலை தாங்கள் முடிவுக்கு கொண்டு வருவதை மேற்கு முயற்சி செய்து நிறுத்தி விடுமோ என்று ஸ்ரீலங்கா படைகள் யோசிப்பதற்கான பல காரணங்களை முன்வைத்தது மட்டுமே. எப்படி இந்த முயற்சியை தீவிரப்படுத்தி மிகவும் கவனமான அணுகுமுறையை அவர்கள் பின்பற்றும்படி ஊக்கப்படுத்தியிருக்கலாம் என்று நான் வெறுமனே எண்ணுவதுண்டு. தர்க்க ரீதியாக பார்த்தால், பிரபாகரனுக்கு தப்பிப்பதற்கு மற்றொரு சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்கிடையில் நாங்கள் விரைவாகச் சென்று அவரைக் கண்டு பிடித்துவிட வேண்டும் என்கிற சிந்தனையைத்தான் மேற்கின் செயற்பாடு அவர்களிடம் ஏற்படுத்தியிருக்கக் கூடும்.
அந்த மோசமான நாட்களின் நினைவுகளிலிருந்து நாங்கள் விடுபட வேண்டுமானால் குறைந்தது உண்மையான பயனுள்ள சில தகவல்களாவது எங்களுக்கு தரப்பட வேண்டும்  .நன்றீ தேனீ

Aucun commentaire:

Enregistrer un commentaire