vendredi 30 novembre 2012

வெளிநாட்டில் உழைத்த பணத்தை முதலீடு செய்வோருக்கு வரிச்சலுகை

வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பும் இலங்கை யர்களுக்கு இங்கு தாம் உழைத்த பணத்தை இங்கு முதலீடு செய்வதற்காக 5 வருட கால வரிச்சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய இந்த வரிச்சலுகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி வெளிநாட்டில் தொழில்புரிந்து உழைத்த பணத்தை முதலீடு செய்வதினூடாக கிடைக்கும் இலாபத்திற்கு வருமான வரி, தேசத்தை கட்டியெழுப் பும் வரி, பெறுமதி சேர்வரி என்பன அறவிடாது சலுகை வழங்கப்படும். இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு கூடுதல் பங்களிக்கும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் மூலம் 2011ல் 5.2 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டது.

Aucun commentaire:

Enregistrer un commentaire