dimanche 11 novembre 2012

ரணிலுக்கும் விமலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை


13ம் திருத்தச் சட்டம் குறித்து ரணிலுக்கும் விமலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை


13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
 
பாராளுமன்ற வளாகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும், அதற்காக தமது கட்சி போராடும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
இதேவேi, மாற்று யோசனைத் திட்டங்கள் எதுவுமிருந்தால் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதில் தமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் இது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire