jeudi 15 novembre 2012

இலங்கை இராணுவத்தில் முதல் தடவையாக தமிழ்ப்பெண்கள் தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளும் பங்கேற்கமுடியும்


இலங்கையின் இராணுவத்தில் முதல் தடவையாக தமிழ்ப்பெண்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.  இது தொடர்பான நேர்முக தேர்வு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரம் என்ற இடத்தில் இடம்பெறவுள்ளது.  இதன்போது 18 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்ட 100 பேர் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
குறித்த நேர்முகத்தேர்வின் போது தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளும் பங்கேற்கமுடியும் என்று தெ ஹிந்துவுக்கு தகவல் வழங்கிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளின் அடிப்படையில், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் ஏற்பாட்டில் தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire