jeudi 29 novembre 2012

செவ்வாயில் விரைவில் குடியேற்றம்

செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம் நிகழும் என்றும் அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் அங்கு குடியேறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் அறிவித்துள்ளார். பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருட்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று சாதனை படைத்தது இந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். முதல் கட்டமாக 10 பேரை மட்டும் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்தும் வசதிகளுடன் ‘பால்கன்-9’ விண்கலத்தை தயாரிக்கும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் ஈடுபட்டுள்ளது. சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடி கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியிருக்கும். செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும். அங்கு குடியேறுவோர், சுயசார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் 80 ஆயிரம் பேரை குடியேற்றத் திட்டமிட்டுள்ளோம் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டார்

Aucun commentaire:

Enregistrer un commentaire