mardi 20 novembre 2012

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பியுள்ளார்.

விண்வெளியில் பணியாற்றி வந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியல் தனது பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பி வந்துள்ளார்
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகள் ஒன்றிணைந்து பூமிக்கு மேல், 410 கிலோ மீற்றர் உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன.

இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அமெரிக்காவின் சார்பில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ரஷ்ய, ஜப்பானிய வீரர்கள் இதில் பயணித்தனர். விண்வெளியில் 127 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ், சோயூஸ் விண்கலத்தின் மூலம் பூமிக்கு நேற்று திரும்பினார்.

இவருடன் ரஷ்ய மற்றும் ஜப்பானிய விண்வெளி வீரர்களும் கசகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கினர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire