vendredi 23 novembre 2012

நாடாளுமன்ற நுழைவாயிலில் பிரதம நீதியரசர்...

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் விசாரிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜராகுவதற்காக அவர் இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியை வந்தடைந்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்ற நுழைவாயில் வைத்து பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்துச் செல்வதை படங்களில் காணலாம்
பிரதம நீதிபதி ஷிராணி பண்டார நாயக்காவை குற்றப்பிரேரணை மூலம் பதவி விலகும் நடவடிக்கையை 'ஜனநாயக்தை நேசிக்கும் சகலரும் கண்டிக்க வேண்டும்' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதித்துறையை பாதுகாப்பது எமது கடமை அதன் மூலம்தான் நாம் எம்மையும் எமது அடிப்படை உரிமைகளை காப்பாற்ற முடியும்' அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறுகிய, அரசியல் இலாபநோக்கில் இதை பார்க்க வேண்டாம்' என வலியுறுத்தினர்.
நீதிசேவை உத்தியோகத்தர்களின் நடத்தையை ஆராய்வதற்கு தான் ஜனாதிபதியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 2000 ஆம் ஆண்டு அரசியல் சட்டமூலத்தில் கூறப்பட்ட சட்டங்களை கொண்டுவருவதற்கும் நிலையியல் கட்டகளை திருத்துவதற்கு பதிலாக ஜே.ஆர் ஜயவர்தனவின் அரசியல் சட்டத்தையும் நிலையியற் கட்டளைகளையும் ஒரு சுதந்திர கட்சி அரசாங்கம் பின்பற்றுவதையிட்டு தான் ஆச்சர்யப்படுதவதாக அவர் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire