mardi 13 novembre 2012

330 பிரதேச செயலகங்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஒரு மணி நேரத்துக்குள் வழங்கும் திட்டம்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 330 பிரதேச செயலகங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை ஒரு மணித்தியாலத்திற்குள் வழங்கும் நாடளாவிய வேலைத் திட்டம் 2013 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட உள்ளதென பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டப்ளியு. டீ. ஜே. செனவிரத்ன தெரிவித்தார். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலகங்களின் தரவுகளை கணனிமயப்படுத்தும் வலையமைப்பு வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். வட மாகாணத்தில் கணனி வலையமைப் புக்கு உட்படுத்தும் பணி பூர்த்தியடைந்துள்ள தாகவும், அதன்படி தற்போது நாடளாவிய ரீதியில் 250 இற்கும் மேற்பட்ட பிரதேச செயலகங்களில் இப்பணி பூர்த்தியடைந் துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 14022 கிராம சேவை உத்தி யோகத்தர் பிரிவுகளுடன் தொடர்புடைய 330 பிரதேச செயலகங்களில் இப்பணி பூர்த்தியடைந்துள்ளமை அரசாங்கத்திற்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும் எனவும் அமைச்சர் டப். ஜே. செனவிரத்ன மேலும் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire