அடுத்த ஆண்டு அனைத்து நாடுகள் தொடர்பான 10 லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிடும் என்று அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்தார். லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ள அவர், வியாழக்கிழமை விடுத்துள்ள கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியிருப்பதாவது: என்னைத் தொடர்ந்து ஆதரித்து வருபவர்களுக்கு நன்றி. அடுத்த ஆண்டும் மிக நல்ல ஆண்டாகவே அமையும். உலகின் அனைத்து நாடுகளின் ரகசிய தகவல்களும் வெளியிடப்படும். இதற்காக 10 லட்சம் ஆவணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இதர மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி எனக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, ஈகுவடார் நாட்டின் அதிபர் ரஃபேல் கொர்ரியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம் என்பது வெள்ளைமாளிகையிலோ, ஊடகங்களிலோ இல்லை. பொய்க்கு எதிராக உண்மை எனும் ஆயுதத்தை ஏந்திப் போராடும் மக்களிடையே இருக்கிறது. எனது கதவுகள் திறந்தே இருக்கின்றன. நான் பேச்சு வார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறேன் என்றார் அசாஞ்சே
Aucun commentaire:
Enregistrer un commentaire