உலகம் அழியாது! 29ம் திகதி இலங்கையில் பூமியதிர்ச்சி ஏற்படும்! - புவியியலாளர் லலித் விஜயவர்த்தன தெரிவிப்பு
உலகத்தின் அழிவு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் ஏற்படும் என கூறிவருகின்ற போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது என விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அதாவது டிசம்பர் மாத இறுதி சனிக்கிழமை அன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும்.
இதன் தாக்கம் இந்தியாவிற்கும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி ஆகியவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும்.
2004ம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் 2013ம் ஆண்டில் விண்கற்கள் விழும் என்ற எச்சரிக்கை என்பவை தொடர்பில் 2001, 2002 ஆகிய ஆண்டுகளின் ஊடகங்களில் தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையாகியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
2012ம் ஆண்டு உலகம் அழியும் என்பது முற்றிலும் போலியான பிரச்சாரம் ஆகும், ஆனால் எதிர்வரும் 29ம் திகதி பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படவுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவுக்கும் ஏற்படும். ஆனால் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படாது.
பூமியின் மீது 2013ம் ஆண்டு விண்கற்கள் விழும் என நான் 2001, 2002 காலப்பகுதியில் எதிர்வு கூறினேன். அதன் பின்னர் இது குறித்து ஆராய்ந்து நாசா உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் அக்கற்களை சிறுதுண்டுகளாக உடைத்தெறியும் நடவடிக்கையில் இறங்கினர்.
அதேபோன்று, 2004ம் ஆண்டு கடல்சார் பாரிய அழிவுகள் இலங்கையில் இடம்பெறும் என்று 2002ம் ஆண்டிலேயே கூறினேன். அதற்கமைய 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி சுனாமி அலைகள் இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கின.
இவ்வாறு எதிர்வு கூறிய அனைத்தும் எனது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட வகையிலேயே இடம்பெற்று முட்ந்துவிட்டன. எனவே நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.
2012ம் ஆண்டில் உலகம் அழியாது. ஆனால் 29ம் திகதி பூமியதிர்வு இலங்கையில் ஏற்படும்.
2019ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் அரேபிய நாடுகள் பாரிய இயற்கை அழிவுகளைச் சந்திக்கும் எனவும் திடமாக கூறியுள்ளார் லலித் விஜயவர்த்தன.

Aucun commentaire:
Enregistrer un commentaire