jeudi 20 décembre 2012

சம உரிமைகளுக்கான இயக்கம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம்


சம உரிமைகளுக்கான இயக்கம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில்  செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை, வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ கெடுபிடிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகள் என ஏராளமானோர் இதில் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire