இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் குறுங்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அன்டனி தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பிராந்திய வலயத்தின் அண்டை நாடுகளுக்கு இவ்வாறு இந்தியா இராணுவப் பயிற்சிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாரா பிரிவுகளில் இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் படையினருக்கு தொடர்ந்தும் இந்தியா பயிற்சி அளித்து வருகின்றதா என இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான லிங்கம் மற்றும் பிரபோத் பாண்டா ஆகியோர் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கை உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளுக்கு இவ்வாறு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சர் அன்டனி குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சிக்கான தேவைகளின் அடிப்படையில் பல மாநிலங்களில் பயிற்சி நடாத்தப்படுகின்றது.
தேசிய நலன்களின் அடிப்படையில் அரசாங்கம் கொள்கைகளை வகுத்து அமுல்படுத்தி வருவதாகவும் இதன் அடிப்படையிலேயே இலங்கைப் படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதனை தமிழக மாநில முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகள் கடுiமாயக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Aucun commentaire:
Enregistrer un commentaire