கடந்த பல வருடங்களாக சட்டவிரோத ஆட்கடத்தல் ஏஜென்டுகளாக செயற்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து பலரை ஏமாற்றியுள்ள சூரியகுமார் மற்றும் சோபா கும்பல் பற்றிய மேலுமொரு வேதனைக்குரிய மோசடிச் சம்பவம் அம்பலமாகிறது.
கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து இழைஞர் யுவதிகளை கென்யா நாட்டிற்கு அழைத்துவந்து பணத்தைப் பெற்றபின்னர் பலரை திட்டமிட்டு ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களிடம் பாதிக்கபட்ட மேலுமொரு விதவைப் பெண்ணொருவர் கண்ணீர் சிந்தி தனது நிலையை எம்மிடம் தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு சூரி அல்லது அப்பன் என அழைக்கப்படும் சு10ரியகுமார் பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியாரான சோபா ஆகியோரால் வன்னியிலிருந்து அழைத்துவரப்பட்டு கென்யா நாட்டில் தங்கவைக்கப்பட்டு 15 இலட்சம் ரூபா பெற்றபின்னர் அவரைக் கைவிட்டநிலையில் இலண்டனுக்கு சென்று செட்டில் ஆகியுள்ளது சு10ரியகுமார் குடும்பம்.
2009ம் ஆண்டு வன்னியில் முள்ளியவாய்க்காலில் தனது கணவரை யுத்தத்தில் பலிகொடுத்த குறித்த விதவை இரண்டு பிள்ளைகளது தாயாராவார். யுத்தம் முடிவுற்றநிலையில் வவுனியாவில் வசித்துவந்த மேற்படி விதவைத்தாயார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமைகாணப்பட்டதை அறிந்த சோபா தனது கணவரை அறிமுகப்படுத்தியதோடு தனது கணவர் பலரை இலண்டனக்கு அனுப்பியதாகவும் அங்கே வதிவு விசாவைப்பெற்றுத்தரவல்ல தமிழ் வழக்கறிஞர் ஒருவர் இருப்பதாகவும் கூறி தாம் ஒரு மாவீரர் குடும்பம் என்றுகூறி குறித்தபெண்ணை கொழும்பிற்கு அழைத்துவந்து 15 இலட்சம் பணம் பெற்றபின்னர் கென்யா நாட்டிற்கு அழைத்துசென்று தங்கவைக்கப்பட்டதாகவும் தம்மோடு பலர் அழைத்துவரப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்.
சுமார் 6 மாதங்களாக தமிழர் ஒரவரது வீட்டில் தங்கவைக்கபட்டிருந்த அவரை கைவிட்டு தனது மனைவியை மட்டும் இலண்டணுக்கு அனுப்பிவிட்டு தானும் சென்றுவிட்டாராம் இந்த சூரியகுமார். தனது நிலைமையையுணாந்த விதவைப்பெண்மணி தான் ஏமாற்றப்பட்டுவிட்டதனால் மீண்டும் இலங்கைக்கு வந்து சூரியகுமாரை தொடர்புகொண்டபோது 3 இலட்சம் பணத்தை கொடுத்துவிட்டு மீதிப்பணத்திற்கு கையைவிரித்துவிட்டதாக கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார் மேற்படி விதவை. (இதே சூரிகுமாரால் ஏமாற்றப்பட்ட பல இழைஞர்கள் பற்றிய தகவல் முன்னரும் வெளியிட்டிருந்தோம்)
இலங்கையில் சீ ஐ டி பொலீசார் மற்றும் விமான நிலையத்தில் செல்வாக்குமிக்க சூரியகுமாருக்காக ஆட்சேர்த்து கொடுப்பதற்கு பாபு என அழைக்கப்படும் சூரியகுமாரது உறவினர் ஒருவரும் மற்றுமொரு பெண்ணும் தற்போதும் ஆட்சேர்த்து கொடுப்பதாக தெரியவருகிறது. இவர்கள் சூரியகுமாருக்கு சொந்தமான வெள்ளைநிற கயஸ் வானொன்றில் சுற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இவர்களது ஆட்கடத்தல் மையமாக கொழும்பிலுள்ள பரனீதா ரூர்ஸ் அன் டிராவல்ஸ் நிறுவனம் செயற்பட்டுவருகிறமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் உரிமையாளராக கிருஸ்ணா என்பவர் செயற்படுகிறார். இவரே கொழும்பில் பணத்தை வாங்கியெடுத்ததாக மேற்படி விதவைத்தாயார் தெரிவித்துள்ளார். இலண்டனில் குடியுரிமை பெற்று கடந்த 15 வருடங்களாக வசித்துவரும் பாலசிங்கம் சூரியகுமார் மன்னார் இலுப்பைக்கடவையை சேர்ந்தவர். பல முகமாற்றுப் போலி கடவுச்சீட்டுகளைப்பாவித்து பயணங்களை மேற்க்கொள்வதாக அவரால் ஏமாற்றப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்கடத்தல் மற்றும் ஏமாற்றுதல் இழைஞர்கள்சிலரை கென்யாவில் அடைத்துவைத்து அடித்து துன்புறுதியதான முறைப்பாடுகளால் கென்யாவில் நைரோபி விமான நிலையத்தில் சு10ரியகுமார் பாலசிங்கம் கறுப்புப்பட்டியலில் இடபட்டுள்ளதாக நம்பகமாக அறியப்படுகிறது. இருந்தும் முகமாற்று கடவுச்சீட்டுகளைப்பாவித்து அவர் தனது பயணத்தை கென்யாவுக்கு மேற்க்கொண்டுவருவதாகவும் இவரது உதவியாளராக கென்யாவில் சாள்ஸ் மற்றும் ரவி ஆகியோரும் செயற்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே சூரியகுமார் கிளிநொச்சியில் உள்ள ஒரு குடும்பத்தாரிடம் - வெளிநாட்டுக்கு அனுப்பிய ஒருவரது பணத்திற்கு பதிலாக அவர்களது பெறுமதிமிக்க காணியொன்றை சீ ஐ டி பொலீசாரது உதவியுடன் கட்டாயப்படுத்தி உறுதி எழுதிவாங்கியுள்ளமையும் அறியவருகிறது.
கென்யாவுக்கு அழைத்துவரப்படும் ஆட்களை தங்கவைக்கும் ஆடம்பர விடுதியாக கீழ்வரும் முகவரியிலுள்ள வீடுஒன்றே பாவிக்கப்படுவதாக குறித்த விதவைத்தாயார் தெரிவித்துள்ளார்.
managing Director - Thavayogarajah Nagaradnam.
BASIL DRILLING COMPANY AND KING CASTLING
GARDEN ESTATE -
NIROBI - KENYA.
இலங்கையிலிருந்து லண்டன் சுவிஸ் கனடா பிரான்ஸ் நாடுகளுக்கு அனுப்புவதாக ஆட்களை அழைத்து வந்து மோசடி செய்துவரும் ஏஜண்டுகளான சூரி மற்றும் அவரது மனைவி சோபா ஆகியோருக்கு உதவியாக.
சுவிற்சலாந்தில் - தாட்சாகினி என்பவரும்
அவரது நண்பர் சுகு என்பவரும்
கென்யாவில் தவம் அல்லது சாள்ஸ் மற்றும் கண்டி ரவி ஆகியோரும் செயற்பட்டுவருகின்றனர் என அறியப்படுகிறது.
இலண்டனில் தலைமறைவாகியிருந்து செயற்படும் சூரியகுமார் (அப்பன்) மற்றும் இவருடன் தொடர்புபட்டோரான மேற்படி நபர்களது புகைப்படங்கள் மற்றும் முகவரிகள் பற்றிய தகவல் அறிந்தோர் எமக்கு அனுப்பிவைத்து தமிழ் இழைஞர் யுவதிகள் தொடர்ந்தும் ஏமாற்றப்படாமலிருக்க உதவிபுரியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவர்களால் கடந்த காலங்களில் இலண்டனுக்கு அனுப்பபட்ட பலர் தற்போது நாடுகடத்தபட்டுள்ளனர். அவர்களிடம் பெறப்பட்டுள்ள தகவலின்படி சூரியகுமாரது மனைவியாரான சோபா தமிழர் விடுதலைசார்பு அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு பெருந்தொகைப் பணம் கொடுத்து சிறப்புவிசா பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. இதற்காக பிரபல தமிழ் வழக்கறிஞர் ஒருவர் உதவியுள்ளதாகவும் அறியப்படுகிறது.
இக் கொள்ளைக்கும்பல் பற்றிய மேலும் பல தகவல்கள் உறுதிப்படுத்தபட்படபின்னர் வெளியிடப்படவுள்ளது.
(கொழும்பிலிருந்து தீபன்)
Aucun commentaire:
Enregistrer un commentaire