
இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி வவுனியாவுக்கான ஒருநாள் விஜயமாக வவுனியாவுக்கு வருகை தந்த போது, யுத்தத்தின் பின்னர் என்னென்ன துறைகளில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு இராணுவத்தினர் உதவி வருகின்றார்கள் என்பது பற்றி வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா எடுத்துரைத்தார்.
இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பயிற்சி பெற்று வருகின்ற முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வு நிலையங்களில் அளிக்கப்படுகின்ற புனர்வாழ்வுப் பயிற்சிகள், புனர்வாழ்வுப் பயற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகளின் வாழ்வாதாரத்திற்கென வழங்கப்பட்டு வருகின்ற சுயதொழில் வாய்ப்புக்கான உதவிகள் பற்றியும் வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விளக்கிக் கூறியுள்ளார்.
இதனையடுத்து, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையத்தையும் இந்திய இராணுவத் தளபதி பார்வையிட்டார். அங்கு தையல் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்களுடனும் உரையாடினார்
Aucun commentaire:
Enregistrer un commentaire