சர்வதேசத்திடம் உதவிக்கரம், நீதிமன்றங்களில் வழக்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், காளியம்மனுக்கு சிதறுதேங்காய் !
ஒரு சிறு விடயத்தில் கூட வெற்றிகாண முடியாத நிலையில் மக்களை ஏமாற்ற தமிழ் ஊடகங்களில் மட்டும் வெற்றிச் சவாரி?
வெளிநாட்டுச் சுற்றுலாக்களையும், போராட்டங்களையும் தொடர்வதால் என்ன பயன் என பொறுமையிழந்த தமிழ் மக்கள் கடும் விசனம் :
இறுதி யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்களுக்கு மேலாகியும் தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வில் இதுவரை ஒரு சிறு முன்னேற்றம் கூடக் காண முடியாத நிலையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது இயலாமையை மூடிமறைக்க தமக்குச் சார்பான தமிழ் ஊடகங்களில் பொய்யாக வெற்றிச் சவாரி செய்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாமே எனும் தோரணையில் தேர்தல்களில் பருவகால உறுதிமொழிகளை வழங்கி அம்மக்களது வாக்குகளை அபகரித்து வரும் தமிழ்க் கூட்டமைப்பு சுலோகங்களைத் தாங்கி வீதியோரங்களில் நின்ற தைத் தவிர இன்றுவரை அம்மக் களுக்காக ஆக்கபூர்வமாக எதனை யும் செய்ய எத்தனிக்கவில்லை எனக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. கடந்த மூன்றரை வருடங்களாக சர்வ தேசத்திடம் உதவிக்கரம் கோருகிறோம் எனக் கூறி வெளிநாட்டுச் சுற்றுலாக்களையும், எடுத்ததற்கெல்லாம் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதையும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், காளியம்மனுக்கு சிதறு தேங்காய் என்ப தாகவும் தமது காலத்தைக் கழித்துவரு வதையுமே மேற்கொண்டு வருகின்றனர். இதற்குச் சில தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமே முன்பக்கச் செய்திகளையும், வர்ணப் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது. இதனால் தமிழ் மக்களது பிரச்சினைகள் ஒருபோதும் தீரப் போவ தில்லை என்பதே மக்களது குற்றச் சாட்டாகும்.இதுபோன்ற உண்மையான விடயங்களை தமிழ் மக்களுக்குச் சுட்டிக்காட்டி அம் மக்களுக்கான உதவிகளை தமிழ்க் கூட்டமைப்பினர் மூலமாக மேற்கொள்ள எந்தவொரு தமிழ் ஊடகமும் முன்வருவ தில்லை எனக் குறை கூறும் மக்கள் கடந்த முப்பது வருடங்களாக இதுபோன்றே இத்தமிழ் ஊடகங்கள் புலிகளையும் வளர்த்துவிட்டு இறுதியில் ஒன்றுமே இல்லாது ஆக்கின என்றும் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.
எவ்விதமான குற்றங்களையும் புரியாது வெறுமனே சந்தேக நபர்களாகக் காணப் பட்ட நிலையில் பல வருடங்களாக சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களை விடுவிக்க இதுவரை தமிழ்க் கூட்டமைப்பு செய்தது என்ன? காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கை என்ன? தீர்வு முயற்சிகளில் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதை விட இவர்கள் மேற்கொண்டது என்ன? என்றும் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தமது இறுதி ஆயுதமாக கல்வி கற்க வேண்டிய பல்கலைக்கழக மாணவர்களைப் பாவித்து கலக நிலையை ஏற்படுத்தி அதில் ஏதாவது குளிர்காய முடியுமா எனப் பார்க்கின்றனர். அன்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி ஒருவரின் சதிக்குப் பலியான மாணவர்கள் சிலர் இன்றும் பொலிஸாரின் கண்காணிப் பில் புனர்வாழ்வு பெறுகின்றனர். தூண்டி விட்ட அந்த எம்.பியோ கொழும்பில் உல்லாசமாக உள்ளார்.
இதனைப் பொதுமக்கள் கேட்டால் துரோகி எனப் பட்டம் சூட்ட முனை வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire