மாத்தளை நகரப் பகுதியில் தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பிலான உண்மையை மறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடுகள் 40 வருடங்கள் பழமையானவை என்று அரசாங்கத்தரப்பினரால் கூறப்படுகிறது.
எனினும் அந்த எலும்புக்கூடுகள், 1989ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது கொன்று புதைக்கப்பட்ட ஜேவிபி இளைஞர்களின் எலும்புக்கூடுகள் என்று பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக அந்தக் காலப்பகுதியில் மாத்தளையில் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் கஜபா படைப்பிரிவினரே இளைஞர்களை கொன்று இந்த இடங்களில் புதைத்திருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் குறித்த பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தனவா? என்பது குறித்து தெளிவில்லை என்று இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire