விண்வெளியில் உள்ள 5 லட்சம் கிலோ எடையுள்ள விண்கல்லை சிறிது நகர்த்தி அமைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாசா' திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், விண்வெளியில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் முதல் மாற்றம் இதுவாகத்தான் இருக்கும். செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செல்லும் விண்வெளி வீரர்கள், தங்கள் ஓடத்தில் எரிபொருள்களை நிரப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விண்வெளி மையமாகவும் இதனைப் பயன்படுத்த முடியும். பூமிக்கும், நிலவுக்கும் நடுவே இந்த பிரமாண்டமான விண்கல் அமைந்துள்ளது. அட்லஸ் வி ராக்கெட் மூலம் அந்த விண்கல்லைச் சுற்றி உறை அமைக்கப்பட்டு, அது இயல்பான இடத்தில் இருந்து சிறிது நகர்த்தப்படும். விண்வெளியில் உள்ள இதுபோன்ற பிரமாண்டமான விண்கற்கள், குறுங்கோள்களை நகர்த்தும் முயற்சி வெற்றியடைந்தால், அங்குள்ள உலோகங்கள், தாதுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை பூமிக்கு எடுத்து வரவும் வாய்ப்பு ஏற்படும். எனினும் இந்த தொழில்நுட்பம் முழுமையாக வெற்றியடைய 10 முதல் 12 ஆண்டுகள் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள
Aucun commentaire:
Enregistrer un commentaire