jeudi 13 décembre 2012

கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.சிறுவர் உரிமைகளை பாதுகாக்க விரும்புவோர்


சிறுவர் உரிமைகளை பாதுகாக்க விரும்புவோர் என்ற வேடத்தில் இலங்கையின் விவகாரங்களில் தலையிடுவதற்கு சுயநல நோக்கம் கொண்ட சில நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் முயன்றுவருகின்றது என்று சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். சிறுவர் உரிமைகளை மேம்படுத்தும் புதிய சில சட்டங்களை கொண்டுவர உதவப்போவதாக இவர்கள் கூறினர் என்றும் அவர் சொன்னார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,
சிறுவர்களின் உரிமைகள், தேவைகள் தொடர்பில் புதிய சட்டங்களை கொண்டுவரும் அல்லது பழைய சட்டங்களை திருத்துவதற்கான தேவையுள்ளது என்பது உண்மையாயினும் இதற்கு எமக்கு சர்வதேசத்தின் ஆலோசனை தேவையில்லை.
சர்வதேச சமூகம் யுத்தம் பற்றியே தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கின்றது. எனினும் மக்களை ஐக்கியப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.ஒரு அப்பாவி பிள்ளையை பெரியதொரு மனிதன் துஷ்பிரயோகம் செய்வது போல சர்வதேச சமூகம் இலங்கையின் மீது அழுத்தம் பிரயோகிக்கின்றது. நாம் சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம் என்றா

Aucun commentaire:

Enregistrer un commentaire