அமெரிக்கா, நியூயார்க் பகுதியில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு அதிர்ச்சியே இன்னமும் விலகாத நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றின் பார்க்கிங் லாட்டில் ஒரு நபர், துப்பாக்கியால் சராமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளார். நல்ல வேளையாக இவர் வானத்தை நோக்கியே சுட்டிருக்கிறார். அதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
நியூபோர்ட் பீச் பகுதியில் உள்ள Fashion Island mall பார்க்கிங் லாட்டில், மாலை நேரத்தில் நடைபெற்றது, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம். கிருத்துமஸ் ஷாப்பிங் காரணமாக பார்க்கிங் லாட் நிரம்பி வழிந்த நிலையில், 42 வயதான மார்கோஸ் குரோலா என்ற நபர் திடீரென தமது காரில் இருந்து வெளிப்பட்டு, வானத்தை நோக்கி சுடத் தொடங்கினார்.
அதையடுத்து பார்க்கிங் லாட்டில் இருந்தவர்கள் அங்கும் இங்குமாக ஓடி, கார்களுக்கு பின்னால் மறைவு தேடி பதுங்கிக் கொண்டனர். சுட்ட நபர் அவ்வப்போது சுடுவதை நிறுத்தி, தோட்டாக்களை லோட் செய்துகொண்டு மீண்டும் மீண்டும் சுட்டுக் கொண்டிருந்தார்.
தகவல் அறிந்து போலீஸ் வந்து சூழ்ந்துகொண்டு பொசிஷன் எடுத்தபோது, சுடுவதை நிறுத்திவிட்டு சரணடைந்தார். இவர் எதற்காக சுட்டார் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire