ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஸல்மை ரசூல் மிக விரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜனன் மொசாஸை நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், இலங்கை ஜனாதிபதியுடன் ஆப்கானிஸ்தானுக்கு இலங்கையின் அபிவிருத்திக்கான உதவிகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், இலங்கை வெளிவிவகார அமைச்சிலுள்ள தந்திரோபாய கற்கைகளுக்கான நிலையத்தில் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்
Aucun commentaire:
Enregistrer un commentaire