lundi 10 décembre 2012

கொலை பட்டியலில் இருந்து கருணா, டக்ளஸ் போல உயிர் தப்பினேன்!' -சம்பந்தன்


 4 வருடங்கள் ஆகிவிட்டபிற்பாடு தான்புலிகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு ஆனானப்பட்ட சம்பந்தன்ஐயாவுக்கேதுணிவு வந்திருக்கிறதுஏனைய எடுபிடிகள்,  பணத்துக்காக வாயைத்திறக்கும் தமிழக ஓநாய்கள்வெளிநாடுகளில் இருந்து கொண்டு பொழுதுபோக்கு அரசியல்பேசும் புலன் பெயர்ந்த தமிழர்கள்நட்டுக் கழண்ட அரசு உறுப்பினர்கள்இம்மனுவேல் குழு,நெடியவன் குழுவிநாயகம் குழு இவர்கள் எல்லாம் எப்போது தான் உண்மை பேசுவார்கள்.
 புலிகளின் கொலை பட்டியலில் எனது பெயரும்எனது சகாக்களின் பெயர்களும்இடம்பெற்றிருந்தனஎன்ற தகவலை வெளியிட்டிருக்கிறார்இலங்கை தமிழ் தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்அப்படியிருந்தும் புலிகளிடம் இருந்து உயிர்தப்பி,தற்போது இலங்கை தமிழர்களின் அதிகபட்ச எம்.பி.க்களை கொண்ட தமிழ் கட்சியின்தலைவராக உள்ளார் இவர்.
.அதே நாடாளுமன்றத்தில் தற்போது உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்),அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் புலிகளின் கொலைப் பட்டியலில்இருந்தவர்கள்தான். அந்த வரிசையில் தாமும்தமது சகாக்களும் புலிகளின் கொலைபட்டியலில் இருந்ததை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைநாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதுமுன்புவிடுதலைப் புலிகள் இலங்கையில் இயங்கிய காலத்தில்அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி.
விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம்தலைவராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து இரா.சம்பந்தன் உட்படஉறுப்பினர்கள்விடுதலைப் புலிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த மண்டையன் அதிரடிபடையணியின் பிரதம தளபதி சுரேஷ் பிரேமச்சந்திரன்ஆலாலசுந்தரம்தருமலிங்கம் ஆகியகூட்டணித் தலைவர்களைக் கொலை செய்த ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்என்று எதிரும் புதிருமாக உள்ள பலரைக் கொண்டு விடுதலை புலிகள் தமது தேவைக்காகஉருவாக்கிய அரசியல் கட்சிதமிழ் தேசியக் கூட்டமைப்புவிடுதலைப் புலிகள் தலைவர்பிரபாகரனால்அக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த இரா.சம்பந்தன (வெள்ளிக்கிழமைஇலங்கை நாடாளுமன்றத்தில் பேசியபோது, 'விடுதலைப்புலிகளுடன்எமக்கு தொடர்பு உள்ளது என எம்மீது தவறான குற்றச்சாட்டுகளும்பிரசாரங்களும்மேற்கொள்ளப்படுகின்றனஅதனை நான் மறுக்கின்றேன்.  ஆனால்நீங்களோ (அரசு)எம்மைப் புலிகள் என்றும்எங்களைப் புலிகளின் பங்காளிகள்பிரதிநிதிகள் என்றும்கூறுகின்றீர்கள். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும். விடுதலைப் புலிகள் சிங்கள மக்களைமட்டும் கொலை செய்யவில்லை. விடுதலை புலிகளின் கொலை பட்டியலில் எனது பெயரும்,எனது சகாக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
புலிகள் இருந்த காலங்களில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குசுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தற்போதுகிடைத்துள்ள சந்தர்ப்பத்தில்எமது சுதந்திரமான கருத்துக்களை வெளியிடுகிறோம்.இதை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதிக்கும்பாதுகாப்புச் செயலாளருக்கும்புண்ணியம் கிடைக்க வேண்டும். இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று யார் யாரோகூறிக்கொள்கின்றனர். புலிகளை எவரும் அழிக்கவில்லை. அவர்கள் தம்மைத் தாமே அழித்துகொண்டனர்.  ஜனநாயகத்தையும்தார்மீகத்தையும்மனித உரிமைகளையும் கடைப்பிடிக்கத்தவறியதாலேயே புலிகள் அழிந்து போனார்கள். வெளிநாட்டில் உள்ள தமிழர்கள்உங்களை'புலம்பெயர்வாழ் சமூகம்என்று சொல்லிக்கொண்டு கூச்சல் போடுகின்றீர்கள். 1956-ம் ஆண்டுமுதல் 1983-ம் ஆண்டு வரை சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பின்போதுதம்மைப் பாதுகாத்து கொள்வதற்காக இந்த மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர்நாம்இன்னமும் இலங்கையிலேயே இருக்கிறோம்.  இலங்கையின் வட பகுதியில  இருந்துராணுவ முகாம்களை முழுமையாக அகற்றவேண்டும் என்றோராணுவம் அங்கிருந்துவெளியேற வேண்டும் என்றோநான் ஒருபோதும் கூறியதில்லை.வடக்கில் நிலைகொண்டுள்ளராணுவத்தினர் தங்களின் வரையறைக்குள் இருந்து செயற்படவேண்டும் என்றுதான்கூறினேன்தமிழர் பகுதிகளில் அவர்கள் புலனாய்வு செய்யலாம்கண்காணிப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவர்கள் எமது மக்களின் வாழ்விற்குஇடையூறாக இருப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்றார்.
தற்போதுஅமெரிக்கா உட்பட வெளிநாடுகளும்ஐ.நா.வும் இலங்கை தமிழர் பிரச்னையைதீர்ப்பதற்குஇரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்இலங்கைஅரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனஅப்படியான நிலையில்அக்கட்சியின் தலைவர்விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அதாவது புலிகளைப் பற்றி உலகம் சொல்வதைஇப்போது சம்பந்தரும் சொல்லிஉண்மைத்தமிழர்களின் மனச்சாட்சியைத் திறந்து காட்டியிருக்கிறார். நக்கீரர்களும்உருத்திராக்களும்,மற்றைய ஆ..சாமிகளும் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டேறிபிள் ஏஜண்டுகளாகச் செயற்பட்டுஇப்போது டபிள்ஏஜன்டுகளாகச் சேவையாற்றிவரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன்போன்றோருக்கும்குதிரை கஜேந்திரன் போன்றோருக்கும் சம்பந்தனின் பேச்சு சற்றுமகிழ்சியைக் கொடுத்திருக்கும்.
இலங்கை சீனியர் அமைச்சரும்முன்பு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டவருமான நிமால் சிறிபால டி சில்வா, 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர் இரா.சம்பந்தன்விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்துக்களைவெளியிட்டுள்ளார்இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இரா.சம்பந்தனின் உரையின்முதல் பகுதி அரசுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதுஎன்றுபேசினார்.தொடர்ந்தும்இரா.சம்பந்தன் பற்றி சிலாகித்துப் பேசிய அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா, 'உறுப்பினர் இரா.சம்பந்தன் இனவாத கோட்பாடுகளை கைவிட்டுஉரையாற்றினார்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார். ராணுவத்தினர் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்மக்களின் மனங்களை வென்று வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார். இதைத்தான் நாமும்சொல்லி வருகிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும்நாம்சொல்லும் கருத்துகளை உறுதிப் படுத்தியதற்குஅரசின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்என்றார்
தற்போது இலங்கையில்நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளில்,அதிகபட்ச உறுப்பினர்களை கொண்ட கட்சிஇரா.சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசியகூட்டமைப்புதான்மற்றைய தமிழ் கட்சிகள்அரசு சார்பு கட்சிகள் என்று கூறப்படுகின்றன.இந்த நிலையில்இரா.சம்பந்தனின் நாடாளுமன்ற பேச்சுதிடீர் திருப்பத்தைஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் சில பிரிவுகள்மற்றும்வைகோநெடுமாறன்சீமான் ஆகியோரும்தமிழ் தேசியக் கூட்டமைப்பை கடுமையானசொற்களில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்தியாகிகளை விட நீண்ட துரோகிகளின்பட்டியலில்இரா.சம்பந்தனின் பெயரையும் இணைத்துக் கொள்ள சான்ஸ் உள்ளது. அல்லது,சம்பந்தனை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை இருந்தால்பிளேட்டை மாற்றி, 'இலங்கை அரசு அச்சுறுத்திஅவரை அப்படி பேச வைத்தது. அப்படி பேசாவிட்டால்,இலங்கையில் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லைஎன்று ஒரே போடாகபோட்டுவிடலாம்.
இரா.சம்பந்தன் குடும்பத்துடன் வசிப்பது,  இந்தியாவில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களின் குடும்மங்கள் இந்தியாவில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire