vendredi 14 décembre 2012

எதிர்வரும் தேர்தல்களை நோக்காகக்கொண்டு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குகொண்டோரின் விபரம்


கடந்த தேர்தலின்போது (08.04.2010) யாழ் மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை (721.350) ஆக இருந்தது. அண்மைய சனத்தொகை புள்ளிவிபரங்களுக்கமைய யாழ் மாவட்டத்தின் மொத்த சனத்தொகை (வாக்காளர் அல்ல) 577.246 ஆக மட்டுமே உள்ளது. இந்நிலையில்  எதிர்வரும் தேர்தல்களை நோக்காகக்கொண்டு கைகோர்த்துள்ள நபர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் பின்வரும் தமிழ் தேசியவாதிகளுக்கு இடமளிப்பது எவ்வாறு? தேர்தல் ஒன்று நெருங்குகையிலேயே வேட்பாளர் நியமனத்தில் குத்து, வெட்டுக்களும், மண்டையில் போடும் நிகழ்வுகளும் இடம்பெறும் என்பதனை நாம இன்றே தெரிவிக்கவிரும்புகின்றோம்.

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குகொண்டோரின் விபரம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஏற்பாடு செய்த தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்த மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று வவுனியா நகர மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 8 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றியுள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய க்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான பாஸ்கரா, புதிய ஜனநாயக மாக்சிஸ லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் செந்தில்வேல், நவ சமசமாஜக் கட்சியின் பிரதிநிதி ஜனகன் மற்றும் காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் பிரதிநிதி மகேந்திரன் இவர்கள் தவிர இன்னும் மூவர் தேர்தலில் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அவாகளாவது சப்ரா சரவணன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி உட்பட காணாமல்போனோரின் உறவினர்கள்உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire