மத்திய ஆபிரிக்க குடியரசில் (Central African Republic) போராளிப் படையினர், தலைநகரை கைப்பற்றும் நோக்குடன் படையெடுத்து நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் பென்குய் எந்த நேரத்திலும் போராளி இயக்கத்தின் கைகளில் விழலாம் என்று கூறப்படுகிறது.
இங்குள்ள ஐ.நா. அமைப்புகள் தமது அலுவலகங்களை மூடிவிட்டு, ஊழியர்களை திருப்பி அழைத்து விட்டன. அமெரிக்க தூதரகம், தமது நாட்டு பிரஜைகளை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவித்துவிட்டது.
எந்த நிமிடமும், எதுவும் ஆகலாம் என்ற நிலையில், மத்திய ஆபிரிக்க குடியரசில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை தருகிறோம், பாருங்கள். கீழேயுள்ள போட்டோவில், போராளி குழு ஒன்றின் தளபதி கிரிஸ்டோஃபி நிடோம்ஜி, தனது இரு பாதுகாவலர்களுடன்.தற்போது தலைநகரை நோக்கி வந்து கொண்டிருக்கும் போராளிப் படைகள், ஒரே இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. வெவ்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஒரே நோக்கத்தோடு தலைநகரை நோக்கி வருகிறார்கள். அந்த நோக்கம், ஜனாதிபதியை அகற்றிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதுதான்.
வரைபடத்தில், மத்திய ஆபிரிக்க குடியரசு எங்கே அமைந்துள்ளது என்பதை பார்க்கலாம்.ஒரு காலத்தில் பிரான்ஸின் காலனி நாடாக இருந்தது மத்திய ஆபிரிக்க குடியரசு. அதன்பிறகு பிரான்ஸ்காரர்கள் இவர்களுக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு அகன்றார்கள். தற்போது, போராளிப் படைகள் தலைநகரை நெருங்கும் நிலையில், பிரான்ஸ் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பிரான்ஸின் ஆதிக்கத்தில் நீண்ட காலம் இருந்த காரணத்தால், இங்கு பேசப்படும் மொழி, பிரெஞ்ச். போராளி இயக்கத்தினர் தமது ஒன்றிணைந்த படையை, Séléka கூட்டணி என்று அழைக்கின்றனர். இவர்கள் பெரிதும், சிறிதுமாக பல நகரங்களை ஏற்கனவே கைப்பற்றி விட்டனர்.தலைநகரில் போராளிப் படையினருக்கு முழுமையான ஆதரவு உள்ளது என்று சொல்ல முடியாது. அதேபோல, கிராமங்களில் சில கிராமங்கள்தான் போராளிப் படைகளுக்கு ஆதரவானவை. சில கிராமங்கள், தற்போதுள்ள ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பவை.போராளிப் படையினர், விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் வைத்திருக்கிறார்கள். இந்த ஆயுதங்கள் ‘நிழலான’ மார்க்கமாக இவர்களை வந்தடைகின்றன. அரசுக்கு நேரடியாக ராணுவ ரீதியில் உதவும் அமெரிக்கா, போராளி இயக்கத்துக்கு ‘சுற்றுப் பாதையில்’ ஆயுத சப்ளை செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இன்று உள்ள நிலையில், போராளி அமைப்புகளை முற்றிலும் அழிக்கும் அளவுக்கு அரசுக்கு பலம் இல்லை. அதேபோல, நாடு முழுவதையும் கைப்பற்றும் அளவுக்கு போராளி அமைப்புகளிடமும் பலம் இல்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire