யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக 400 அறைகள்
கொண்ட விடுதியொன்றை நிர்மாணிக்கவும் கிளிநொச்சியில் பொறியியல் பீடமொன்றை
அமைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியது. யாழ். பல்கலைக்கழகத்தில் 6000
மாணவர்கள் கற்பதோடு 1600 வெளி மாணவர்களும் கற்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி 654.4 மில்லியன் செலவில் ஆண், பெண் விடுதி நிர்மாணிக்கப்படும். இது
தவிர கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடமொன்று
2437 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படும். 2013ல் ஆரம்பிக்கப்பட்டு 5
வருட காலத்தில் நிர்மாணப் பணிள் நிறைவடையும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire