சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், இன்று தேசிய பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பல பாகங்களிலும் இவ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு, வவுனியா பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டன. 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 7ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்ற மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு தொகுதி தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தொகுதித் தலைவர் பரமானந்தம் தலைமையில் மட்டக்களப்பு நல்லையா வீதியல் உள்ள தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நினைவுதின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்ததுடன் நாடபளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.
Aucun commentaire:
Enregistrer un commentaire