ஜி. பி. எஸ். வழிகாட்டி கொண்ட இலக்குகளை துல்லியமாக தாக்கும் சுமார் 7000 குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்பதற்கு அமெரிக்கா கொங்கிரஸ்சபை அனுமதி அளித்துள்ளது.இதன்படி 647 மில்லியன் டொலர் பெறுமதியான 250 தொடக்கம் 2000 இறாத்தல் கொண்ட குண்டுகள் இஸ்ரேலுக்கு விற்கப்படவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ‘இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடப்பாடு அமெரிக்காவுக்கு உள்ளது.
இஸ்ரேலின் தற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உதவுவது அமெரிக்காவின் தேசிய நலனில் முக்கிய பங்காகும்’ என்று இது தொடர்பில் பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையில் இருவாரங்க ளுக்குமுன் இடம்பெற்ற உக்கிர மோதலால் இஸ்ரேல் வான் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே அது அமெரிக்காவிடம் இருந்து மேலும் ஆயுதங்களை கொள்வனவு செய்கிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire