எவ்வாறு கிடைத்தது என படையினர் விசாரணை
புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு 50 புத்தம் புதிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் புலிகளுக்கு ஆதரவான உள்ளூர் தமிழ் அரசியல்வாதி ஒருவரும் இனம்காணப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்காக நிதியுதவிகள் லண்டனில் உள்ள புலிகளின் வலையமைப்பினால், வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாவீரர் தினத்திற்கு முன்னர் இந்த மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவை குறித்துப் படையினர் விசார ணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire