யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
ஹெபிடாட் நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் இந்த உதவிகளை வழங்கவுள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடமைப்புத்திட் டங்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்த உதவிகளின் மூலம் யுத்தம் காரணமாக இடம்பெயர் ந்த 4 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இந்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
மேற்படி வீடமைப்புத் திட்டங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் சுமார் ஐம்பது மில்லி யன் யூரோக்களை வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire